Monday, August 20, 2007

மோசடிகளின் முழு உருவமாக மாறிவரும் தனியார் வங்கிகள்.

வங்கியின் பணம் பெறுவதற்கு கட்டணம் வசூலிப்பார்களா? இந்தியாவில் பெருகி வரும் தனியார் வங்கிகளின் கேஷ் கவுன்டர்களில் பணம் செலுத்தினால் அதை பெற்றுக்கொள்ள கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆமாம். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பில் தொகையை பணமாக செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையை செக்காக செலுத்த வசதி வைத்துள்ளார்களாம்; எனவே கவுண்டரில் பணமாக செலுத்தினால் கட்டணம் வசூலிப்பார்களாம். செக்காக செலுத்தினால் என்ன ஆகும்? உங்கள் கடனை கட்டுவதற்கு கடைசி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செக்கை கலெக்ஷன் பாக்ஸில் போட வேண்டுமாம். அப்படியென்றால் கடைசி நாள் என்பதற்கு என்ன அர்த்தம்? சரி. செக்காக செலுத்தலாம் என்றால் அதற்கு ரசீது கிடையாது. எனவே நீங்கள் செக் கொடுத்ததற்கு அத்தாட்சி கிடையாது. எனவே அவர்கள் சவுகரியப்பட்டபோது (தாமதமாக) அந்த செக்கை கலெக்ஷனுக்கு அனுப்புவார்கள்.

பிறகு தாமதக்கட்டணம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்கள். ஆக மக்களிடம் கொள்ளை அடிப்பது ஒன்றே லட்சியம். ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள், அவர்களிடமிருந்து எத்தனை கோடி ரூபாய்கள் இவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்று எண்ணிப்பாருங்கள்.

இவ்வாறு மக்கள் மீது சுமத்தப்படும் கொடுஞ்சுமையால் மக்கள் கடன் தவணை கட்டத்தவறும் போது நடக்கும் அராஜகங்கள் அனைவருக்கும் தெரியும்.

இதற்கான தீர்வுதான் என்ன? இந்த தீர்வை அடைவதில் உங்கள் பங்கு என்ன?





-மக்கள் சட்டம் குழு

4 comments:

வெங்கட்ராமன் said...

இதே எண்ணம் தான் நண்பரே எனக்கும்.

Terms & Conditions என்ற பெயரில் வங்கிகள் நம்மை சுரண்டுகின்றன.

இதில் முதலிடம் வகிப்பது. ICICI.

இந்தக் கொள்ளையில் அரசும் சேவை வரி என்கிற பெயரில் பங்கு பெறுகிறது. தங்களுக்கு வருமானம் வருவதால் அரசாங்கமோ, ரிசர்வங்கியோ இதற்கு துணை போகிறது.

Anonymous said...

இந்த பிரசினை குறித்து பலருக்கும் தெரிவதில்லை என்பது உண்மை. காரணம் பலரும் பில்களை முழுமையாக படிப்பதில்லை.

இந்த பிரசினையை தீர்ப்பதில் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று எழுதினால் அது குறித்து யோசிக்க முடியும்.

Anonymous said...

Yes you are absolutely right.

Reserve Bank should act on these issues.

I heared that you are initializing some Public Interest Litigation against the Banks.

Congratulations.

தகடூர் கோபி(Gopi) said...

சட்டரீதியாகவோ வேறு வழிகளிலோ போராடினால் இதற்கு தீர்வு கிடைக்க நாட்கள் ஆகலாம்.

எனக்கு உடனடித் தீர்வாக தெரிவது Online Transaction மூலமாக பணம் செலுத்துவது தான். ஒரே வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து கடன் அட்டை கணக்குக்கு Online Transaction மூலமாக பணம் செலுத்த கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. செலுத்தப்பட்ட பணம் உடனடியாய் கணக்கில் கொண்டு வரப்பட்டுவிடும்.

கடன் அட்டை தரும் அதே வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவதும் எளிது. சேமிப்பு கணக்கில் Minimum Balance (சில வங்கிகளில் ரூ.500, சில வங்கிகளில் ரூ.5000 வரை :-( ) வைத்திருக்க வேண்டிய தொல்லையைத் தவிர வேறு ஏதும் பிரச்சனை இல்லை.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!