கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் குறைகளை களைவதற்காக www.CreditCardWatch.org என்ற இணையதளம் ஆரம்பித்து சுமார் ஓராண்டு காலத்தில் பெற்ற அனுபவத்திலும், மற்ற நிகழ்ச்சிகள், ஆலோசனை வழங்குவது, வழக்கு தொடுப்பது உள்ளிட்ட அனுபவங்கள் மூலமாகவும் கிரெடிட் கார்டு பிரசினைகளை களைய சில வழிகள் கண்டறியப்பட்டது.
1.அதில் தலையாய தீர்வாக கிரெடிட் கார்டு குறித்த விதிமுறைகள் உட்பட அனைத்து விபரங்களையும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வழங்கினால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
2. கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களின் பிரசினைகளை யாரிடம் முறையிடுவது என்பதும் தெளிவாக தெரியவில்லை. அதற்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
இந்த இரு அம்சங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான கொள்கைகளை வகுத்துள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும், விதிமுறைகள் அனைத்தையும் ஆங்கிலம், இந்தி மற்றும் (தமிழ் உட்பட) மாநில மொழிகளில் வழங்க வேண்டும், என்றும்
நுகர்வோர்களின் குறைகளைத்தீர்க்க அனைத்து வங்கிகளிலும் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.
கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்தும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுள்ள "சமூக-பொருளாதார நீதிக்கான மையம்" சார்பில் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் வெள்ளியன்று தலைமை நீதிபதி திரு ஏ.பி.ஷா தலைமையிலான முதல் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
-மக்கள் சட்டம் குழு
4 comments:
ரொம்ப நல்ல விஷமய்யா. நல்லா செய்யுங்கய்யா. உங்களப்போல நாலு பேரு இருந்தாதான் எங்களை மாதிரி நாலு பேரு மான, ரோஷத்தோட பொளைக்க முடியும்.
அதுசரி ராஜா, நான் உங்க ஆபிஸுக்கு வந்தப்ப கிரெடிட் கார்டு கிராதகனுங்கள சமாளிக்கற வழியை சொல்லி குடுத்துப்புட்டு காசு (பீசு) வாங்க மாட்டேன்னு சொல்றியே! நீ எப்படி பிழைக்கிறது?
நீ இல்லாதப்ப ஆபிஸ் வந்து நீ எழுதுன "கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு சட்டங்கள்" புத்தகத்தை வாங்கிகிட்டு 100 ரூபாயை கொடுத்தப்பதான் மனசு ஆறுச்சு.
நல்லா இருங்க ராசாக்களா...!
எந்த பேப்பரிலயும் நியூஸைக் காணோம். என்ன டுபாக்கூரா?
mana niraiwana wazhthukal,
wazhthukal
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!