Saturday, December 1, 2007

பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது!

கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால் பெரும்பான்மை பாதிக்கப்பட்டாலும், அந்த மதங்களையும், அவை சார்ந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.
மூடத்தனங்களை தோலுரிக்கும் அனைவரும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இதற்கு எந்த நாடும், எந்த மதமும் விதிவிலக்காக அமையவில்லை.

எகிப்து நாட்டில் கரீம் சுலைமான் அமீர் என்ற 23 வயதுடைய சட்ட மாணவர்,

இஸ்லாம் மதத்தையும், நாட்டின் அதிபரையும், அந்நாட்டின் அல்-அஸார் மதத்தலைவர்களையும் அவரது பிளாக்குகள் (http://karam903.blogspot.com/,
http://shiningwords.blogspot.com/) மூலமாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். (அவரது வீடியோ பேட்டி: http://www.youtube.com/watch?v=Y_tARm-SF64)

ஆனால் அவரது பிளாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தால், மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற போர்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எழுதிய மனித உரிமை ஆர்வலராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது.

சுமார் இரண்டு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியா மாகாணத்தில் உள்ள போர்க் அல்-அராப் சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.

அவரது கருத்துகளுக்காக அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த மதங்களுள் ஒன்றான கிறிஸ்தவ மதமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவே விளங்கியுள்ளது. மதங்களை விமர்சித்தவர்களை அதிகார பலத்தால் மண்டியிட வைப்பதும், அதற்கு மறுப்பவர்களை விஷம் கொடுத்து கொல்வதுமே அம்மதத்தின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சித்தர்களின் சிந்தனை மரபென்பது மக்களின் மூடத்தனங்களை அகற்றும் பகுத்தறிவு மரபாகவே பெருமளவில் உள்ளது. எனினும் ஆதிக்க சக்திகளை கலங்கடித்த இந்த இலக்கியங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபில் வந்த தோழர் பெரியாரின் போராட்ட வாழ்வு நாம் அறிந்ததுதான். அவரது சீடர்கள் என்று கூறிக்கொள்வோரின் ஆட்சியிலும் இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுவது ஆன்மிக கருத்துகளே. அதற்கு மாற்றாக உள்ள இலக்கியங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில், பெரியாரேகூட பெண் விடுதலைப் போராளியாக வருகிறாரே தவிர கடவுள் மறுப்பாளராக காட்டப்படுவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பில் இந்திய குடி மக்களுக்காக விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளில்

“சமயம், மொழி, பிராந்தியம் அல்லது குறுகிய பிரிவுகளைத்தாண்டி வந்து, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும்;

பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும்…”


“அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும்…”

“-ஆவன புரிவதை ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக்கடமையை யாராவது செய்யப்போனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி குற்றவியல் சட்டம் உங்களைத் தடுக்கும்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் எந்த அராஜகத்தையும் விமர்சிக்கக்கூட பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அவர்களில் பெரியாரின் சீடர்களும், இடதுசாரிகளும் அடக்கம்.

உதாரணமாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற அரசு ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாதத்தை சொல்லலாம். அந்த சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் மட்டுமே கொந்தளித்தனர். அரசியல் தலைவர்கள் சிலர் அந்த சம்பவத்தை ரசித்தனர். மற்ற சிலர் மவுனம் காத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக “தெஹல்கா” பத்திரிகை அண்மையில் மேற்கொண்ட புலனாய்வு இந்திய பத்திரிகை வரலாற்றில் புதிய முத்திரை பதித்தது. ஆனால் சமூகத்தில் அது எதிரொலித்ததா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சில ஊடகங்களைத்தவிர மற்ற ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்தன. அரசியல்வாதிகள் அதையும் அரசியலாக்க முயற்சித்தனர். நீதிமன்றங்களோ தங்கள் “கற்றறிந்த” தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டன. ஆக மொத்தத்தில் மிகப்பெரும் சான்றாதாரங்கள் யாருக்கும் பயனின்றி போகும் நிலை.

இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. ஆனால் அம்மதத்தை விமர்சிக்கும் தஸ்லீமா நஸ் ரீன் போன்றவர்களை தாக்கி அம்மத தீவிரவாதிகள் நிறைவு காண்கின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கும். வழக்கு தொடுப்பதிலிருந்து நீதிமன்றம் வரை பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பதால் மதரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஆக, கருத்துரிமை என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு இணக்கமான கருத்து உள்ளவர்களுக்கே என்பதே உண்மை நிலை. இந்த நிலை நீடித்தால் இன்று எகிப்தின் சட்டமாணவர் கரீம் சுலைமான் அமீர்-க்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ் பிளாக்கர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தமிழச்சியின் பிளாக்கில் எழுதப்பட்ட கருத்தை ஏற்கமுடியாமல் அந்த பிளாக்கையே களவாடி அழித்தவர்கள்தான் இந்தியாவின் அதிகார பீடங்களிலும் வீற்றிருக்கின்றனர்.

என்ன செய்யப்போகிறோம்?
-சுந்தரராஜன்

28 comments:

சிவபாலன் said...

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்.

ஆதிக்க சக்திகளை இனங்கண்டு ஒழிக்க நம் மக்கள் முதலில் தெளிவு பெற வேண்டும்.

இல்லாத கடவுளுக்காக நேரம் விரையும் செய்யும் நம் மக்கள் நம் ச்ந்ததியையே அடிமைப் படுத்த துடிக்கும் ஆதிக்க சக்திகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

வென் திரையில் தலைவனைத் தேடும் நம் மக்களை யார் நல் வழிப்படுத்துவது? என்ன செய்யப்போகிறோம்?

விடையில்லா கேள்விகள் மட்டும் எஞ்சியிருக்கிறது!

Anonymous said...

மிக நல்லதொரு பதிவு.

எகிப்தில் மற்றுமொரு வலைப்பதிவாளரின் அங்கத்திய போலீஸ்காரர்களின் அராஜகம் சம்பந்தப்பட்ட வீடியோ சாட்சி படங்கள் பலவற்றை யூ ட்யூப் தடை செய்து விட்டது உங்களுக்கு தெரியுமா?

அந்த வலைஞரின் பெயர் வாயல் அப்பாஸ். ஒரு முறை எகிப்து போலீஸ்காரர்கள் ஒரு சாதாரண ஓட்டுனர் ஒருவரை லட்டியை அவரது ஆசன வாயில் விட்டு கொடுமை செய்து போலீஸ்காரர்களே மானபங்கம் செய்யும் எண்ணத்துடன் அதை படமாக தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்ததை வாயல் அப்பாஸ் யூ ட்யூபில் போட்டிருந்தார். இந்த பிரச்சினையால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் வாயல் அப்பாஸின் படங்கள் யூ ட்யூபில் இருந்த அழிக்கப்பட்டுவிட்டன.



இது எகிப்து அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு இணங்க யூ ட்யூப் செய்திருக்கும் என நம்பப்படுகிறது. அப்படியானால், யூ ட்யூபின் இணையத்தின் கருத்து சுதந்திரம் என்ன ஆனது? இணையத்திலும் அராஜகர்கள் தங்களது கைவரிசை காட்ட ஆரம்பித்து விட்டார்களா? தனி மனிதனுக்கு இணையம் மட்டுமே இதுநாள் வரைக்கும் ஒரு முழு கருத்து சுதந்திர தளமாக இருந்து வந்திருக்கிறது. இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

தமிழச்சிக்கு நடந்தது ஒரு பெருங்கொடுமை. எதிர்பாராதது.

பதிவுக்கு நன்றி.

ஜமாலன் said...

அருமையாக எல்லாவற்றையும் தொகுத்தளித்துள்ளீர்கள். கருத்து சுதந்திரம் என்பது நீங்கள் கூறியதுபோல ஆளும் அமைப்புகளுக்கான கருத்தை சுதந்திரமாகச் சொல்வதே. எதிரான கருத்துக்களின் குரல்வளை நெறிக்க மதங்களின் வழியாக அரசே இதனை தனது கண்டும் காணாத்தனத்தின் மூலம் முன் நின்று நடத்துகிறது.

-ஜமாலன்.

Tech Shankar said...

அட இவங்களைத் திருத்தவே முடியாதுங்க.. இவங்க எப்பவுமே இப்படித்தான்..
இவங்களுக்கு ஒரு அழிவுகாலம் எப்பத்தான் வருமோ.

அகராதி said...

//வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.//

இதெல்லாம் புதிய செய்திகளாக உள்ளன. இது போன்ற வரலாற்றுத்திரிவுகளை விரிவாக எழுதுங்கள்.

லிவிங் ஸ்மைல் said...

மிகவும் நல்ல பொருளுள்ள பதிவு. தயராக இருப்போம். எதிர்கொள்ளவம். அதிகாரத்தை தொடர்நது கேள்வி கேட்போம்.



வாழ்த்துக்கள்

Swaminathan Mathivanan said...

மிகவும் நல்ல கருத்து...

Unknown said...

எகிப்தில் அப்துந்நாசர் காலத்திலிருந்தே உண்மையான இஸ்லாத்தை சொல்பவர்கள் நசுக்கப்பட்டே வந்தனர். இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பினர் கடுமையாக வதைக்கும் சிறைக் கொடுமைகளை அனுபவிக்கச் செய்து கொல்லப்பட்டனர். உண்மை இஸ்லாம் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கெதிராக இருப்பதால் அவ்வடக்குமுறை இன்றும் தொடர்கதையாகும் அவலம் தொடர்கிறது.

Anonymous said...

கட்டற்ற சுதந்திரம் என்பது ஏற்க முடியாத கருத்து. யாருடைய கருத்தும் வேறுயாரையும் புண்படுத்தக் கூடாது என்பதே என் கருத்து.

எனினும் மதநம்பிக்கைகள் என்ற பெயரில் மற்றவர்களின் உரிமையையும் பறிக்க அனுமதிக்கக்கூடாது. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் அறிவியல்பூர்வமாக, கேட்பவர்களை சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைய வேண்டும்.

Unknown said...

கருத்துச் சுதந்திரம் என்பதே பெரும்பான்மையின் பெருமைகளை பீற்றிக்கொள்ளும் ஒரு சாளரம், அவ்வளவே. சொல்லவிட்டால் தானே கேட்பதற்கு?? கடவுள் இல்லை என்பது ஆத்திகவாதியை புண்படுத்தினால், கடவுள் உண்டு என்று இவர்கள் போடும் ஆட்டம் நாத்திகர்களை புண்படுத்துவதாகாதா??

நண்பரே எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது: எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என பதிவு செய்வது எங்கனம்??

சீனு said...

//நண்பரே எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது: எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என பதிவு செய்வது எங்கனம்??//

எல்லா மதத்தையும் திட்டி ஒரு பதிவு போடுங்க. போதும்...:)

Unknown said...

நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்றும் குழந்தைகளை எந்த மதத்தின் சாயலுமற்று நிகழ்த்த முடிவெடுத்துள்ளேன். இந்து, கிறுத்துவன் என்பதை போல "மதமற்றவன்" என பதிவு செய்ய சட்டம் இடமளிக்கிறதா?? ஆம் எனில் அதை பதிவு செய்வது எப்படி??

மக்கள் சட்டம் said...

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக திருமணம் உள்ளிட்ட குடும்ப உறவுகளே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

இந்நிலையில் திருமணம் குறித்து விரிவாக தொடர்பதிவு இடும் திட்டமும் உள்ளது. அதில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். (உடனடி தேவையென்றால் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளவும்)

மதமற்ற மனிதநேய சமூகத்தை படைப்பதில் ஆர்வம் காட்டும் உங்களை பாராட்டுகிறோம். நன்றி.

-சுந்தரராஜன்

Unknown said...

இசை,
குழந்தைகளை எந்த மதத்தின் சார்பும் இல்லாமல் வளர்க்க வழியுண்டு. அதாவது உங்களுக்கு அடுத்து வரும் சந்ததியினர்.


தகவலுக்கு:
சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html


ஆனால் உங்கள் மேல் படிந்துள்ள சாதி/மதக் கறையை சட்டப்படி நீக்க முடியாது என்றே நினைக்கிறேன். சுயப்பிரகடணம் வேண்டுமா னால் செய்யலாம்.

மக்கள் சட்டம் -நண்பர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

***

சுய மரியாதைத் திருமணம் , எந்த மத/ஜாதி அடையாளங்களும் இல்லாத சட்டப்படியான ஒன்று.

Anonymous said...

அருமையான பதிவு...

சீனு said...

இசை,

//நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்றும் குழந்தைகளை எந்த மதத்தின் சாயலுமற்று நிகழ்த்த முடிவெடுத்துள்ளேன். இந்து, கிறுத்துவன் என்பதை போல "மதமற்றவன்" என பதிவு செய்ய சட்டம் இடமளிக்கிறதா?? ஆம் எனில் அதை பதிவு செய்வது எப்படி??//

Confirm ஆக தெரியவில்லை. இது அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களை பொருத்து என்று நினைக்கிறேன். பிரான்ஸ்(?) நாட்டில் எந்த ஒரு மதத்தையும் சேராதவர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

seethag said...

கருத்து சுதந்திரம் என்னும் ஒரு எண்னத்தைத்தான் பொதுவாகப்பார்ர்க்க தான் எனக்கு தோன்றுகிறது.
மதமே இல்லாத சீனாவாகட்டும், ரஷ்ஷிய்யாவகட்டும்..என்ன செய்கிறர்கள்?
யாஹூ, கூகிள் இரண்டுமே சீனாவில் தணிக்கைத்தான் செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் அரசின் நிர்ணயத்தின் பேரில் யாஹூ சீன அர்சிர்கு சில சீனர்களின் பெயரகளை கொடுத்து அவர்களை சிரயில் அடைத்துள்ளது.

சமீபத்தில் அந்த வழக்கில், அமேரிக்காவில் யஹூவிற்ற்க்கு எதிராக அளித்த தீர்ப்பில் இவ்வாறு குறீப்பிட்டார்..

"னீஙள் வணிகத்துறையில் வல்லுனரகளாக இருக்கலாம். ஆனால் மாரல் கோடில் மிகவும் கேவலமானவர்காளாகிவிட்டீர்கள்' என்று.

மன்னிக்கவும்.. உங்கள் பதிவு ஒருதலைப்பட்ச்சமாக உள்ளது.
பெரியாரின் னாத்திக எண்ணங்களயும் ஒன்றும் சமாதன முறையில் பறப்பவில்லையே?

அவருடய சீடர்கள் என்று சொல்பவர்கள் குஷுபுவிற்க்கு என்ன செய்தார்கள்?

சரித்திரத்தை மேற்க்கொள் காட்டுகிறீர்கள், ஆனால் இன்று நடப்பதை சொல்லும்போது நேர்மையில்லயே?இதுவும் ஒருவித கருத்து சுதந்திர மறுப்பே.

Anonymous said...

பொருள் பொதிந்த பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

தோழர் சீதா அவர்களின் கருத்துரையில் பெரியாரின் நாத்திக கருத்துகள் வன்முறை மூலம் பரப்பப்பட்டதாக கூறுகிறார். அதற்கு ஆதாரம் கூறவில்லை.

அதேபோல குஷ்பூ விவகாரத்திலும் குஷ்பூவின் கற்பு குறித்த கருத்துக்கு திக-வோ, திமுக-வோ எந்த பிரசினையும் செய்யவில்லை. ஏனெனில் பெரியார் கற்பு என்ற கற்பிதத்தையே ஏற்காதவர்.

எனவே தோழர் சீதா அவர்கள் பெரியாரைப் பற்றியும், தமிழையும் படித்துவிட்டு மறுமொழி எழுதினால் நன்றாக இருக்கும்.

மக்கள் சட்டம் நண்பர்கள் அதிக அளவில் புதிய பதிவுகளை இடவேண்டும். மொக்கைப்பதிவுகள் போல இந்தப்பதிவுகள் எளிதானதல்ல என்பது தெரியும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், சமூக நலன் கருதி புதிய பதிவுகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள் நன்றி.

Hari said...

/*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. */

I can't stop laughing after reading these lines.

My dear friend, whole world is trembling with fear bcoz of Islamic terriorism. But what made u think so?

After all, its a post of insanity, with an "intellectual" cover.

I dragged down ur page. Oh, u r a Human right activist..???

Then whatelse one can expect?

Anonymous said...

// hari said...
/*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. */

I can't stop laughing after reading these lines.

My dear friend, whole world is trembling with fear bcoz of Islamic terriorism. But what made u think so?

After all, its a post of insanity, with an "intellectual" cover.

I dragged down ur page. Oh, u r a Human right activist..???

Then whatelse one can expect?//

"தெய்வத்தின் குரல்" எழுதிய தெய்வத்தின் சீடர்களே சங்கரராமன் கொலைவழக்கில் கைதாகும்போது மனித உரிமை சட்டம்தான் பேசுகின்றனர்.

மத சிறுபான்மையினர் மனித உரிமை பேசுவதில் தவறேதும் இல்லை.

நரேந்திர மோடியை புகழ்ந்து பேசும் கோட்சேவின் வாரிசுகளை திருத்தவே முடியாது.

அவர்களின் வலைப்பூவில் தமிழில் அடிக்கும் "அவா"ளுக்கு இங்கே பின்னூட்டம் போடும்போது மட்டும் தமிழ் நீச பாஷையாகிவிடுகிறது.

Anonymous said...

நீங்கள் சொல்லவந்த கருத்து ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்தது - எல்லா இச்லாமியநாடுகளிலும் நடக்கும். இதில் தேவையில்லாமல் சமுதாய சீர்கேட்டின் உட்சபட்ச தலைவரான ராமசாமியை இழுப்பதில் உங்கள் உள்நோக்கம் புரிகிறது. இந்துவாகவே பிறந்து, இந்துக்களையே வெறுக்க வளர்க்கப்பட்ட 'திராவிட' குஞ்சுகளில் நீங்களும் அடக்கம். அவ்வளவே!

Hari said...

/*"தெய்வத்தின் குரல்" எழுதிய தெய்வத்தின் சீடர்களே சங்கரராமன் கொலைவழக்கில் கைதாகும்போது மனித உரிமை சட்டம்தான் பேசுகின்றனர்.*/
This is where u guys end-up. if u don't have a valid point to defend u will label the opponent with "caste" label.

/*அவர்களின் வலைப்பூவில் தமிழில் அடிக்கும் "அவா"ளுக்கு இங்கே பின்னூட்டம் போடும்போது மட்டும் தமிழ் நீச பாஷையாகிவிடுகிறது.*/

How come it is possible for u to answer in such an intellectual manner? :)))))

ROSAVASANTH said...

//கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.//


எல்லா மதங்களும் அந்த மதத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரானதுதான். கிரிஸ்தவமும், இந்துமதம் சார்ந்த சட்டங்களும், பார்பனியமும் விளைவித்த வன்முறைக்கு அளவு கிடையாது. என்றாலும் சட்டபூர்வமாக, அரசு அங்கீகாரத்துடன், நீதிமன்றம் மூலமாக நியாயப்படுத்தப்படும் இந்த வகை வன்முறை, இன்றய காலகட்டத்தில், இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அது தவறான பிரச்சாரம் என்று சும்மானாச்சிக்கு சொல்லி (அதற்கு தவறான ஆதாரங்கள் அளித்து) உங்களையோ யாரையோ சமாதானப் படுத்திக் கொள்வதில் என்ன பயன் இருக்கிறது என்று புரியவில்லை.

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

Anonymous said...

...please where can I buy a unicorn?

Anonymous said...

rommba nalla pathivu

مدونه المهندس المصرى للمعلوميات said...

شكرا على هذه المعلومات الجيده

مهندس بترول مصرى said...

thanks for agood info

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!