இந்த சட்ட விரோத செயலுக்கு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரசு பல்கலைக்கழகமும் உதவி செய்வது காலத்தின் கோலம்.
(தினத்தந்தி, திருச்சி பதிப்பு : 29-07-07)
இந்த விளம்பரத்தில் பல்கலைக்கழகத்தின் முகவரியோ, வேறு எண்களோ, இணையதள முகவரியோ இல்லை. பதிலாக சமையல் கலை கற்றுத்தரும் கல்லூரிகளின் முகவரிகள்தான் உள்ளன.
மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).
சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).
தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR. MGR MEDICAL UNIVERSITY).
தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).
இந்த அமைப்புகளின் அங்கிகாரம் இல்லாமல் ஒரு பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியை "தொலைநிலை கல்வி"யில் வழங்குகிறது, சமையல் கலை கல்லூரிகள் வழியாக.
எனவே மருத்துவ கல்லூரியில் பல்லாயிரம் ரூபாய்களை கொட்டி, ஐந்தாண்டுகளை செலவு செய்து இனி யாரும் மருத்துவம் படிக்க வேண்டாம். வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக்கல்வியில் ஒரே ஆண்டிலேயே மருத்துவம் படித்து மருத்துவர் ஆகலாம்.
வாருங்கள் தமிழர்களே, மருத்துவம் படிப்போம்! நமக்கே உடற்கோளாறு என்றால் வேறு நல்ல டாக்டராக பார்ப்போம்!
-மக்கள் சட்டம் குழு
7 comments:
அட பாவிங்களா!
இப்படி கூடவா இந்த தமிழ் நாட்டுல நடக்கும்?
எதையெல்லாம் வெச்சி ஏமாத்தறதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சி!
மக்கள் உருப்பட்ட போலதான் போங்க!
:-(
ஒரு பல்கலை கழகமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலை அளிக்கிறது. அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும்.
ராஜேஷ் குமார்
இது நகைச்சுவை பதிவு என்று நினைத்தேன். முழுதும் படித்து அதிர்ந்தேன். முழுமையாக கண்டிக்கப்பட வேண்டிய, உரியவர்கள் தண்டிக்கவேண்டிய விஷயம் இது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் நாங்களும் பங்கேற்கலாமா?
அன்புடன்,
கு. ஞானதேசிகன்
என்னாது, சமையல் கத்துகுடுக்கற இடத்துல வைத்திய கல்லூரியா? இது நல்லா இருக்கே?
ஒரு வேளை "மாவோ" சொன்ன மாதிரி வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கி நாடு பூரா மருத்து சேவ பண்ண போறாங்களா?
அது சரி! அவங்க சொல்லலன்னா என்னா நீங்களாவது பல்கலைகழகத்தோட விலாசம் கொடுத்தா நாங்க நேரில போய் உடனடியா டாக்டர் பட்டம் வாங்க எதாவது வழியிருக்கான்னு பார்ப்போமில்ல.
டாக்டர் (பட்டம் பெறவிருக்கும்)கோவணாண்டி
நானும் தொலைதூர கல்வியில் படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவன்தான். ஆனால் தற்போது துணிக்கடை, நகைக்கடை போல பல்கலைக்கழகங்களின் முகவர்கள் அனைத்து வகையான விளம்பரங்கள் வழியாகவும் தொலைதூர கல்விப்பட்டங்களை விற்பதாக தோன்றுகிறது.
இந்த பட்டங்களுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பார்த்து ஒரு பல்கலைக்கழகமே மருத்துவ படிப்பை தொலைதூரக்கல்வியில் தருவதாக கூறுவது, இன்றைய கல்வியின் நிலையை காட்டுகிறது.
இதேபோக்கில் தொலைதூரக்கல்வியில் நீச்சல் அடிப்பது, காரோட்டுவது குறித்தெல்லாம் படிப்புகளை ஆரம்பித்து விடுவார்கள் போலுள்ளது.
டப்பாங்குத்து நடிகர் விஜய், டிஜிட்டல் தமிழன் என்ற பட்டம் பெற்ற இயக்குனர் ஷ்ஷ்ஷங்கர் போன்றவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும்போது, மற்ற புரட்சி தமிழர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்க (விற்க) விரும்பிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் இந்த கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம்.
சமையல் கல்லூரியில் மருத்துக்கல்வி என்றால் மற்ற கல்லூரிகளில் என்ன கற்றுக்கொடுப்பார்கள்?
தமிழகத்தின் கல்வி நிலையை எண்ணிப்பார்த்தால் மிகவும் ஆனந்தமாகவே உள்ளது.
இன்றைய தினமணி சென்னை பதிப்பில் இதற்கான விளம்பரம் வந்துள்ளது.
இது போன்ற மோசடிகளை சட்டரீதியாக தடுத்துநிறுத்த முடியாதா?
Dr. கு. செல்வராஜ்
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!