Friday, August 10, 2007

கிரெடிட் கார்டு - பொதுநல வழக்கு - ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ்

கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் அனைத்திலும் நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவேண்டும் என்றும், கிரெடிட் கார்டு விதிமுறைகள், பில் விவரங்கள் அனைத்தும் தமிழ் உட்பட மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு அஜித் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி திரு ஜோதிமணி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு, 27ம் தேதி நடைபெறும்.


-மக்கள் சட்டம் குழு

8 comments:

மோகனகிருஷ்ணன் said...

அன்பு நண்பர்களுக்கு,

நீங்கள் மேற்கொண்டுள்ளது மிக நல்ல பணி.

வங்கியொன்றின் சட்ட ஆலோசகராக பணியாற்றும் எனக்கே தெரியாத பல நுகர்வோர் நலன் காக்கும் சட்டங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.

தங்கள் இணையதளமும் மிக சிறப்பாக உள்ளது. குறிப்பாக கிரெடிட் கார்டு - அரசியல் பார்வை என்ற கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன்.

வாழ்த்துகள்.

மோகனகிருஷ்ணன்.

nizamuddin said...

waazhthukkal

Anonymous said...

waazhthukkal

Sundararaman said...

Regarding this case I have seen some news in Tamil News Papers such as Dinamani, Dinakaran and Dinamalar.
But there is no news in English Dailies.
Possibly publish the news in English newspapers and magazines.
It will help other same minded persons and organisations to unite with you to fight against the MNC banks.
Best wishes,

Sundararaman,
Chennai

மணியன் said...

சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை எழுப்பும் பதிவுகள் தமிழில் வருவதைக் காண மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள் !

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உங்களுடைய பொது நலன் சார்ந்த இந்த முயற்சிகளுக்கு எனது பணிவான நன்றிகள்.. இருட்டில் ஏற்றப்படும் ஒளி விளக்காக தங்களுடைய சேவை தமிழ் மக்களுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்றே நம்புகிறேன். விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன்..

வாழ்க வளமுடன்

Anonymous said...

-----------------------------------வங்கியொன்றின் சட்ட ஆலோசகராக பணியாற்றும் எனக்கே தெரியாத பல நுகர்வோர் நலன் காக்கும் சட்டங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
-----------------------------------வங்கியோட சட்ட ஆலோசகருக்கே இந்த சட்டம் தெரியாதா?
ஒரே தமாசுதான் போங்க!
தேவுடா! தேவுடா!!

somya tadiboyina said...

wonderful piece of information, I had come to know about your blog from my friend Nandu , Hyderabad, I have read at least 7 posts of yours by now, and let me tell you, your website gives the best and the most interesting information. This is just the kind of information that I had been looking for, I'm already your RSS reader now and I would regularly watch out for the new posts, once again hats off to you! Thanks a ton once again, Regards, sbi po result 2014

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!