Friday, August 17, 2007

பிரபல வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு...???!!!

நாணயம் விகடன் ஆகஸ்ட் 31 இதழில் வெளிவந்த செய்தி:சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் பிரபல வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி அதன் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டதால் எந்த நேரத்திலும் வங்கியில் பணம் எடுக்க முடியும்.

வாசகரின் தங்கைக்கு காலேஜ் பீஸ் கட்டணம் கட்டுவதற்காக 2,000 ரூபாயை எடுத்து கொடுத்தனுப்பியுள்ளனர். அந்த தொகையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி ஏற்க மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். வேறு 500 ரூபாயை கொடுத்துவிட்டு வங்கிக்கிளையில் போய் புகார் செய்யப்போனார், வாசகர். “இந்த நோட்டு எங்க ஏடிஎம்-மில் எடுத்த நோட்டுங்கறதுக்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டுள்ளனர் வங்கி அதிகாரிகள். கோபத்தில் அந்த கள்ள நோட்டை கிழித்து எறிந்துவிட்டு நாணயம் விகடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார், வாசகர்.

நாணயம் விகடன் செய்தியாளர் உடனே அந்த வங்கிக்கிளைக்கு சென்று விசாரித்தபோது, “இந்த விஷயத்துக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது சார். அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு வர வாய்ப்பில்லை என்பதுதான் எங்கள் பதில்” என்று வங்கி அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.

நாணயம் விகடனின் விசாரணையில், சார்பதிவாளர் அலுவலக வட்டாரம் ஒன்றின் அருகே உள்ள வங்கி ஏடிஎம்-மிலும் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதாக தெரிய வந்துள்ளது.

நாணயம் விகடன் செய்தியாளர், இந்த விசாரணையின்போது இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் சுசித்ரா சவுத்ரியையும் சந்தித்திருக்கிறார். வங்கி ஏடிஎம்-களில் கள்ள நோட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் உறுதியாக மறுக்கவில்லை. மேலும், “வங்கி ஏடிஎம்-களில் கள்ளநோட்டு கிடைத்து, அதை வங்கி மறுத்தால் போலிஸில் புகார் கொடுக்கலாம். நேரடியாக ரிசர்வ் வங்கியிலும் புகார் கொடுக்கலாம். தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று சுசித்ரா சவுத்ரி கூறியுள்ளார்.

மற்றொரு நண்பர் ஒருவர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல ஐந்தெழுத்து வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். 1500 ரூபாயை எடுக்க அவர் முயற்சி செய்தபோது வெறும் 500 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. ஆனால் கணக்கில் 1500 ரூபாய் குறைந்து விட்டது. டெலிபாங்கிங் மூலமாகவும், நேரிலும் சென்று புகார் செய்தும் பலனேதும் இல்லை. காவல்துறையில் புகார் செய்ய முயற்சித்தால் அவ்வளவு பெரிய வங்கி 1000 ரூபாயை திருடுமா? கம்ப்யூட்டர் பொய் சொல்லுமா? என்று கேள்வி கேட்டு நண்பரை கிண்டல் செய்து அனுப்பி விட்டனர்.

இது போன்ற பிரசினைகளில் நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ சிக்கியிருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டால் ரிசர்வ் வங்கியை அணுகி இந்த பிரசினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ள முடியும்.-மக்கள் சட்டம் குழு

9 comments:

Prof Pandiyan said...

What? Counterfeit currency in bank ATM? Oh God!

ஜீவி said...

இந்த விஷயத்தில் 'நாணயம் விகடனின்' புலனாய்வு பாராட்ட
வேண்டிய ஒன்று.
'இதை எங்கு போய் சொல்லி
அழுவது' என்று திகைக்கும்
ஸ்ரீமான் பொதுஜனத்திற்கு மிகவும்
ஆறுதலாக அந்தப் பத்திரிகை
நட்ந்து கொண்டுள்ளதைக்
குறிப்பிடவேண்டும்.

SJenna said...

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே!

கலெக்சன் கண்ணாயிரம் said...

அரசு அங்கிகாரம் பெற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் கள்ள நோட்டு என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. அரசு உடனடியாக செயல்படவேண்டும்.

R. Venkatachalapathy, Chartered Accountant, Chennai said...

தங்கள் ப்ளாக் குறித்து ஆனந்தவிகடனில் படித்தேன். நல்ல முயற்சி. நானும் ஒரு ப்ளாக் தொடங்க வேண்டும். உதவி செய்வீர்களா? தொலைபேசியில் பேசிவிட்டு நேரில் வரலாமா?

ஆர். வெங்கடாசலபதி

இனியவன் said...

எனக்கும் ABN-AMRO பேங்கில் இப்படி நடந்தது, அங்கிருந்தே கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொள்வதாக கூறினர். பிறகு மதியம் அளவில் தொடர்பு கொண்டு, 24 மணி நேரத்தில் அக்வுண்டில் ஏற்றிவிடுவதாக கூறினர். அதே போல் செய்தனர்.

<<<< அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டால் ரிசர்வ் வங்கியை அணுகி இந்த பிரசினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ள முடியும். >>>>
தொடர்பு தளத்தையும் சொன்னால் செளகரியமாக இருக்கும்.

மக்கள் சட்டம் said...

கீழே எங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.


-மக்கள் சட்டம் குழு

மக்கள் சட்டம் said...
This comment has been removed by the author.
Anonymous said...

யாரைத்தான் நம்புவதோ??!!(..~

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!