Tuesday, August 21, 2007

கிரெடிட் கார்ட் அராஜகம் - சிக்கியது SBI-GE கூட்டணி

சென்னை, ஆக.21-

சென்னை கிரெடிட் கார்டு ஏஜென்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு விவகாரங்களை "ஜி.ஈ. கண்ட்ரிவைடு" என்ற ஏஜென்சி நிறுவனம் கவனித்து வருகிறது. கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாதவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த நிறுவனத்தின் வேலையாகும். இந்த நிறுவனம் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ளது.

நேற்று இந்த நிறுவனத்திலிருந்து டெலிபோனில் பேசி பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை அமீனா கார்த்தி என்பவரை மிரட்டியுள்ளனர். அமீனா கார்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.15 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை வசூலிப்பதற்காக சென்னை வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுவதாக போனில் பேசி மிரட்டியுள்ளார். இதுபற்றி அமீனா கார்த்தி வடக்கு கடற்கரை போலிசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். துணை கமிஷனர் சூடேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜகோபாலன் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்ட்ர் செல்வமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் பெயரில் மிரட்டியதாக "ஜி.ஈ. கன்ட்ரிவைடு" ஏஜென்சியின் ஊழியர் கவுதம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 மிரட்டல் ஊழியர்களை போலிசார் தேடி வருகிறார்கள். பணத்தை வசூல் செய்வதற்காக போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரை தவறாக பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

***

சிக்கியது யானையின் வாலில் உள்ள சிறு மயிர்தான். கிரெடிட் கார்டு வணிகம் முழுமையாகவே இது போன்ற மோசடி மற்றும் மிரட்டல் முறையிலேயே நடைபெறுகிறது.

பொதுமக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இதுபோன்ற சமூக அநீதிகளை கட்டுப்படுத்தும்.

-மக்கள் சட்டம் குழு


17 comments:

OSAI Chella said...

unkal seevai mika mika paaraattathn thakkathu. thodarungkaL

மாசிலா said...

நல்ல பதிவு.

மறுபடியும் நான் சொல்ல வருவது, அரசாங்கம்தான் தகுந்த சட்டங்களை பிறப்பித்து தன் மக்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றவேண்டும். வங்கிகளின் அட்டகாசங்களால் மக்கள் அவதிபட்டால் அதற்கு அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும். அரசின் அனுமதியுடந்தான் இந்த வங்கிகள் செயல்படுகின்றன.

வங்கிகளை எதிர்த்து போராடுவதை விட அரசாங்கத்தின் அறிதலுக்கு இப்பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டும்.

இதுபோன்ற கடன் தொல்லைகளால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. ஒரு சமுதாயமே சீரழிந்துகொண்டு வருகிறது. பல பிணங்களும் விழுகின்றன. இவற்றை எல்லாம் பெரிய சமுதாய பிரச்சினையாக கருதி அரசாங்கம், அதிகாரிகள் ஆகியவர்கள் பொது மக்களை, பாதிக்க பட்டவர்களை, எளியவர்களை படுபாவிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

பொன்வண்டு said...

12/08/2007 அன்று மக்கள் தொலைக்காட்சியில் கிரெடிட் கார்டு மோசடி குறித்த கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் கொடுத்தனர். இவை போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன. உயர்நீதி மன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்தான் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவரும் இதே ஜிஇ பற்றிக் கூறினார்.

Anonymous said...

இது தப்புதான். ஆனால் கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல், ஏமாற்றுவர்களை என்ன செய்வது!!

மாசிலா said...

அநாநி //கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல், ஏமாற்றுவர்களை என்ன செய்வது!!//

உன்னை யார் கடன் கொடுக்க சொன்னது?

கடன் கொடுப்பது உன் பொழப்பு.

அதை திருப்பி கொடுப்பதும் கொடுக்காததும் கடன் வாங்கியவரின் திறன் அல்லது விருப்பம்.

இதுதான் உண்மை.

Anonymous said...

//அதை திருப்பி கொடுப்பதும் கொடுக்காததும் கடன் வாங்கியவரின் திறன் அல்லது விருப்பம்.//
உங்களது பதில் ஒரு சாரானது. தப்பு செய்தவர்கள்ளை தண்டிக்கதான் வேண்டும் அது யாராக இருந்தாலும்.

மாசிலா said...

//தப்பு செய்தவர்கள்ளை தண்டிக்கதான் வேண்டும் அது யாராக இருந்தாலும்.//

சரியாக சொன்னீர்கள்.

திருப்பித்தர இயலாதவரிடம் குண்டர்களை வைத்து மிரட்டி கொலை செய்யவும் துணிந்தவர்களை தண்டிக்கவும் வேண்டும்.

சாதாரண பத்து பதினைந்து ஆயிரம் ரூபாய் கடனுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட ஏழைகளை உருவாக்கிய இந்த சமுதாயத்தை, வங்கி அமைப்புகளை தண்டிக்க வேண்டும்.

காசு திரும்பி வராதது என தெரிந்தும் ஏழைகளுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் வங்கிகளையும் தண்டிக்கவேண்டும்.

முத்து தமிழினி said...

ITs a great blog.

சிவபாலன் said...

Keep up Good Work!

Keep Post such a worthful Posts!

Anonymous said...

ஒரு வணிக நிறுவனம் தன் வணிகத்திற்காக வண்ணவண்ணமாக விளம்பரம் செய்யும்தான். அதில் கவனமாக இருக்கவேண்டியது நுகர்வோர் பொறுப்பு. கணக்கு துவங்கும்போதே எல்லா Terms & Conditions-ஐ படித்து அதன்படி நடந்துகொள்வதும், மற்றவர்களை பார்த்து விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு கடன் எனும் குழியில் விழாமல் எச்சரிக்கையாய் இருப்பது நம் கடமை. பசிக்கிறது என்பதற்காக எதையும் உண்போமா என்ன ?

அதே சமயம், சில பல காரணங்களால் காலத்தே கடனை வாடிக்கையாளர்கள் செலுத்த இயலாவிட்டால் அபராதம் போடலாமேயொழிய மிரட்டலெல்லாம் செய்தால், உச்சிமயிர் பிடித்து கூட்டத்தோடு கொண்டுவந்து கொட்டிலில் அடைத்து களி தின்ன வைக்கவேண்டியதுதான்.

பி.கு : நான் இங்கே Bank of America கடன் தொகை செலுத்த ஓரிரு நாட்கள் தாமதமாகவே, கிட்டத்தட்ட $30 அபராதம் போட்டிருந்தார்கள். நான் உடனே நுகர்வோர் சேவைத்துறைக்கு தொலைபேசி, நான் பழைய தவணைகளை சரியான தேதிக்கு செலுத்தியிருப்பதை நினைவூட்டி, அந்த $30-ஐ தள்ளுபடி செய்ய கேட்கவும் உடனே அவ்வாறே செய்தார்கள்.

ஆக கடன் அட்டை நம் கைக்களில்தான் இருக்கவேண்டும். கழுத்துக்கு வர அனுமதிக்கக் கூடாது.

அன்புடன்
முத்துக்குமார்

Anonymous said...

The news never says how SBI is directly involved in this fraud but claims it in the heading :-(

Anonymous said...

The news never says how SBI is directly involved in this fraud but claims it in the heading :-(

vetri selvan said...

Dear Anonymous, SBI has outsourced its credit card operations to GE Countrywide. As per the Reserve Bank of India gudielines eventhough a bank has outsourced its work, the banks are vicarously liable for all mis-deeds of its agents.(For your information if your dog bites anybody your are liable to pay the compensation to the victim)In this sense the supreme court has orderd the presence of ICICI bank chairman before the court.

வேங்கடேசன் said...

கடன் தருகிறேன் பேர்வழி என்று, கடனை பெறுபவருக்கு அக்கடனை திரும்ப செலுத்தும் திறன் உள்ளதா என்பதை ஆராயாமல் கடனை வழங்குகின்றனர்.

நாடு உள்ள நிலையில் பலரும் அன்றாட செலவுகளுக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளனர். அதில் பெரும்பாலும் கடனை திரும்ப செலுத்த விரும்புபவர்களே.

வங்கிகள் விதிக்கும் அநியாய கட்டணங்களே, மக்கள் கடனை கட்ட விடாமல் செய்கின்றன.

கடன் வசூல் நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே நடக்க வேண்டும். ஆனால் நான் கேள்விப்பட்டவரை இது வரை கிரெடிட் கார்டு நிறுவனங்கள், கடன் வசூலிப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை ஒன்றைக்கூட எடுக்கவில்லை.

இந்த தனியார் வங்கிகள் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வியாதிகளுக்கும் "கொடுக்கவேண்டியதை" கொடுத்துவிட்டு சட்டத்திற்கு மேம்பட்ட நிலையை எய்து விடுகின்றன.

இந்த நிலையில் இந்த வங்கிகளை எதிர்க்கும் உங்கள் போராட்டம், இந்த வங்கிகள் அடிக்கும் கொள்ளையில் பங்கு பெறும் அரசுப்பொறுப்பில் உள்ளவர்களையும் அம்பலப்படுத்துவதாக அமைய வேண்டும். அப்போதுதான் மக்கள் உண்மையான விழிப்புணர்ச்சியை அடைய முடியும்.

வேங்கடேசன்

Anonymous said...

hiThanks.

I was only saying the way the news is reported is misleading. I do agree with point the bank shares its responsiblity.

Also we dont know if the individual has used his own idea or as per SBI s direction.

மக்கள் சட்டம் said...

Thanks Mr. Anony,
We don't think the news is misleading in anyway.
Even if the person applied his own idea, the SBI is also vicariously liable for the crime. Because the arrested person didn't entered in the mis-deed for his personal benefit.
To get more clarification on the liabilities of Banks on outsourcing, please log in to www.CreditCardWatch.org.

Possibly add your name in further comments.

Thank you once again.

Sundararajan

Mary Robert said...

அவசர கடன் வேண்டும்?
* உங்கள் வங்கி கணக்கில் மிகவும் வேகமாக மற்றும் அவசர பரிமாற்ற
நீங்கள் பணத்தைப் பெற்ற பின்னர் * கொடுப்பனவு எட்டு மாதங்கள் ஆரம்பித்தது உங்கள்
வங்கி கணக்கு
* குறைந்த வட்டி விகிதங்கள் 2%
* நீண்ட கால கொடுப்பனவு ( 1-30 ஆண்டுகள்) கால
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாதாந்திர பணம்
* . எப்படி நீண்ட அதை நிதி எடுக்கும்? ஒரு கடன் விண்ணப்பம் பதிவு செய்த பின்னர்
நீங்கள் எதிர்பார்க்க முடியும் என்று 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஆரம்ப நடவடிக்கையாக மற்றும்
நாம் வேண்டும் தகவல் கிடைத்ததும் 72-96 மணி நேரத்திற்குள் நிதி
நீங்கள் .

முறையான மற்றும் உரிமம் பெற்ற கடன் நிறுவனத்தின் அதிகாரி தொடர்பு
மற்ற நாடுகளில், என்று நிதி உதவி .
இப்போது தொடர்பு மூலம் மேலும் தகவலுக்கு , கடன் விண்ணப்பம்

மின்னஞ்சல்: maryrobert422@gmail.com

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!