ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலமும், பர்சனல் லோன் மூலமாகவும் தனி நபர்களை சுரண்டுவதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆனால் அரசின் ஒரு துறையான மாநகராட்சிகளே இத்தகைய வங்கிகளிடம் சிக்குவதையும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச சதிவலைப் பின்னலையும் மருத்துவர் ரமேஷ் அம்பலப் படுத்துகிறார். மாஸ்டர் பிளான் என்ற இந்த திட்டங்களுக்கான கருத்தாய்வு கூட்டமோ, கலந்தாய்வு கூட்டமோ மாநகராட்சியின் சமூக நல கூடங்களில் நடப்பதில்லை. அனைத்தும் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன வசதி செய்யப்பட்ட தனியார் விடுதிகளில்தான் நடைபெறுகின்றன.
இந்த செலவும் நம்மிடம்தான் வசூலிக்கப்படுகிறது. மருத்துவர் ரமேஷின் கட்டுரையை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்:
நன்றி: சமூக விழிப்புணர்வு, கீற்று
-மக்கள் சட்டம் குழு
2 comments:
மக்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டிய பல நிகழ்ச்சிகள், மக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி, மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர ஓட்டல்களில் நடைபெறுவதை சுட்டிக்காட்டி உள்ளீர்கள். மிகச்சரி.
மருத்துவர் ரமேஷ், அவர் சாராத துறையில் நடைபெறும் அவலத்தை மிகசரியாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அவருக்கும் பாராட்டுகள். இதை வெளியிட்ட "சமூக விழிப்புணர்வு" இதழ், இணையத்தில் ஏற்றிய "கீ்ற்று", பிளாக்கில் ஏற்றிய "மக்கள் சட்டம்" ஆகியோருக்கு நன்றி.
தொடரட்டும் ஆதிக்கவெறிக்கெதிரான மக்கள் யுத்தம்.
Wonderful posting. Thank you Mr.Sundararajan.
-Manokaran
PKS, Kilambur.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!