அந்த வழக்கில் கீழ்க்கண்ட அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
(அ) அனைத்து வங்கிகளிலும் பிராந்திய அளவில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அமைப்பு நிறுவவேண்டும்.
(ஆ) ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.
(இ) கிரெடிட் கார்டின் விதிமுறைகள், பில் விவரங்கள் ஆகிய அனைத்து விவரங்களயும் தமிழில் வழங்க வேண்டும்.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் நேற்று (28ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஜூன் 14 அன்று அனுப்பிய கடிதத்திற்கு, ஆகஸ்ட் 23ம் தேதி (இந்த வழக்கு தொடர்ந்த பின்) ரிசர்வ் வங்கி பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறி அதன் நகல்களை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த (7 வரி) கடிதத்தை பார்த்த நீதிபதிகள், "இந்த கடிதத்தை ஏற்க முடியாது, நீங்கள் (இந்திய ரிசர்வ் வங்கி) இந்த வழக்கில் வலியுறுத்தப்பட்ட விஷயங்களை அமல்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அது குறித்து இந்த நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினர். மேலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்பதால் வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு இந்த வழக்கை மாற்றவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, தானும் அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது கிரெடிட் கார்டு கேட்டதாகவும், அதற்கு வங்கி சார்பில், சட்டம் படித்தவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கமுடியாது என்று கூறிவிட்டதாகவும் நகைச்சுவையாக கூறினார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு வழக்கறிஞர், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், விபரம் தெரிந்த-கேள்வி கேட்கக்கூடிய வழக்கறிஞர்; காவல்துறையினர்; செய்தியாளர்கள்; அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் கிரெடிட் கார்டு வழங்குவதில்லை என்று கூற நீதிமன்றம் சிரிப்பால் அதிர்ந்தது.
ரிசர்வ் வங்கி எழுதிய கடிதத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்களுக்காக அதை மீண்டும் தருகிறோம்.
August 23, 2007
Dear Sir,
Credit Card operation of Banks
We thank you for your letter dated 14th June, 2007 on the captioned subject forwarding us certain suggestions/issues on the credit card operations of banks in India.
2. In this connection, we would like to convey that Reserve Bank of India is presently conducting a study on the entire credit card operations of banks based on complaints received. Suggestions/ issues forwarded by you are being examined as a part of the study. On completion of the same, appropriate guidelines , if any, will be issued to banks by our regulatory department.
Yours sincerely,
(Sujatha Elizabeth Prasad)
General Manager.
பின் குறிப்பு: கடிதம் எழுதியதற்கு எந்த பலனும் இல்லாத நிலையில், அது குறித்து வழக்கு தொடர்ந்த பின் கடமை உணர்வுடன் (மிகச்சரியாக 60ம் நாளிலேயே) பதில் கடிதம் அனுப்பிய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு நன்றி.
-மக்கள் சட்டம் குழு
6 comments:
தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள்!
-புதியவன்
ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது. இது போன்ற சமூக அவலங்களை வெளிக்காட்டும் உங்கள் சேவை வளர்ந்தோங்க வாழ்த்துகள்
-ராஜசேகரன்
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபத் துறை சார்பில் "கிரெடிட் கார்டு குறித்த கருத்தரங்கு" என்ற பெயரில் ஒரு சடங்கு இன்று சென்னையில் நடந்தது. அது குறித்து விவரமான பதிவு நாளை...!
மக்கள் சட்டம் said...
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபத் துறை சார்பில் "கிரெடிட் கார்டு குறித்த கருத்தரங்கு" என்ற பெயரில் ஒரு சடங்கு இன்று சென்னையில் நடந்தது. அது குறித்து விவரமான பதிவு நாளை...!
Today its 31st August..!!?? Where is the post..!!??
மக்கள் சட்டம் said...
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபத் துறை சார்பில் "கிரெடிட் கார்டு குறித்த கருத்தரங்கு" என்ற பெயரில் ஒரு சடங்கு இன்று சென்னையில் நடந்தது. அது குறித்து விவரமான பதிவு நாளை...!
Today its 31st August..!!?? Where is the post..!!??
கிரெடிட் கார்ட் வணிகத்தை நெறிப்படுத்தும் வகையில் தொடரப்பட்ட வழக்கு நாளை (3-09-07) திங்கள் அன்று காலை விசாரணைக்கு வருகிறது.
-மக்கள் சட்டம்
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!