Monday, August 27, 2007

குற்றவாளி சஞ்சய் தத்துக்கு “கட்டிப்பிடி வைத்தியம்” செய்த போலிஸ் (டாக்டர்கள்..!!??) பதவி நீக்கம்.

செய்தி:

சஞ்சய் தத்துடன் கைகுலுக்கிய கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்; 8 போலீஸாரிடம் விசாரணை

மும்பை, ஆக 27: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள எரவாடா சிறையிருந்து இந்தி நடிகர் சஞ்சய் தத், ஜாமீனில் வெளியே வந்தபோது அவரிடம் கைகுலுக்கிய ஒரு கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் மற்ற 8 பேரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சஞ்சய் தத்திடம், போலீஸ் சீருடையில் இருந்த கான்ஸ்டபிள்கள் மற்றும் அதிகாரிகள் கைகுலுக்கியது தவறு இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்குமாறு மாநில துணை முதல்வரும் போலீஸ் துறை அமைச்சருமான ஆர்ஆர் பாட்டீல் மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்

நன்றி: தினமணி 27-08-07


விமர்சனம்:


ஒரு நபர் விசாரணைக்கைதியாக சிறைச்சாலைக்குள்ளோ,
காவல்நிலையத்திற்குள்ளோ சென்று விட்டால் அவர் ஆசனவாய்க்குள் கூரிய ஐஸ்குச்சி திணிக்கப்படலாம். அவரே பெண்ணாக இருந்தால் வேறு ஏதாவது திணிக்கப்படலாம்.

ஆனால், “உள்ளே” செல்பவர் திரைப்பட நட்சத்திரமாகவோ, அவரது குடும்பத்தினர் ஆளுங்கட்சியின் எம்.பி.யாக இருந்தாலோ, அவர் சிறைக்குள்ளேயே சிகரெட் பிடிக்கலாம், சிகப்பு கம்பள விரிப்பில் நடக்கலாம். இடைக்கால ஜாமீனில் அவர் வெளியே வந்தால் அத்தனை போலீசும் அணிவகுத்து நிற்கும். அயல் நாட்டு அதிபரை வழியனுப்புவதுபோல கட்டிப்பிடிக்கும்; கையை குலுக்கும்; கண்ணீர் மல்க விடையும் கொடுக்கும்!


சாமானிய மனிதன் என்றால், அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வரவே பல காலம் ஆகும். அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் அதிலும் பல சிக்கல் இருக்கும். வெளியே வந்த நபர், “உள்ளே” போனபோது கொண்டுசென்ற அனைத்து உடல் உறுப்புகளோடும் இருக்கிறாரா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

சஞ்சய் தத்துக்கு கொடுத்த மரியாதையை குறை சொல்லவில்லை. ஆனால் அந்த மரியாதையில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இந்த சம்பவத்தின்போது சஞ்சய் தத்தை கட்டிப்பிடித்து, கைகுலுக்கிய
சாதாரண போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்! நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஆதரவாக, பொறுப்பு மிக்க மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, திருவாய் மலர்ந்தாரே. அவர்மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?-த. லிங்கேஸ்வரன்
(lingeshwaran@lawyer.com)

3 comments:

மாசிலா said...

நூத்துக்கு நூறு உண்மையும் ஏற்கக்கூடியதும் உங்கள் வாதம்.

இன்றும் இந்திய சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற உயிர்கள் பல ஆண்டுகளாக எந்த வழக்கு மன்றங்களையும் பார்க்காமல், தாங்கள் ஏன் எதற்காக உள்ளே இருக்கிறோம் என்பது தெரியாமலேயே மனநோய் பிடித்து உடல் நலமிழந்து சொந்தங்கள் சுகங்கள் ஏதும் இல்லாமல் பூச்சி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

இதைப்பற்றி பிபிசி வானொலி இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரையை நான் ஏற்கனவே இந்திய சிறைச்சாலைகளில் வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கும் மனிதர்களைப்பற்றி>என்கிற தலைப்பில் ஒரு பதிவாக போட்டிருந்தேன்.

இப்படியெல்லாம் சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வரும் வேளையில், சஞ்சய்தத் போன்ற தேச குற்றம் இழைத்த அயோக்கியர்கள் ஏதோ சுதந்திர போராட்ட தியாகியைப்போல் பந்தா செய்து ஆதிக்க ஹிந்து மற்றும் பார்ப்பன ஊடகவியலார்கள் இவ்விசயத்தை ஒரு பெரிய வெற்றிப் பெருமிதமிக்க வீரச்செயல் போல் சோடித்து மக்கள் மனங்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலமை விரைவில் மாறும் என நம்புவோம்.

"அதற்காக போராடுவோம்."

அனைத்து இந்தியரும் இதற்காக தங்களது கண்டன குரலை எழுப்பவேண்டும்.

மக்கள் குரலே மகேசன் குரல்!

சீரிய விழிப்புணர்வு சேவை செய்துவரும் மக்கள் குரல் அமைப்பினர்களுக்கு எனது நன்றிகள்.

இனிதே தொடர்க!

மாசிலா said...

இதையும் படியுங்க

பிபிசி இணைய தள செய்தி.

Siva said...

Your blog gives lates news.Its fonts and color attracts the reader not to skip thsi blog

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!