Wednesday, February 13, 2008

வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)

சுதந்திர இந்தியாவின் வயது 60-ஐ தாண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றி உரையாற்றும் தேசத்தலைவர்கள் வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கின்றனர்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் இந்தியா பல மடங்கு முன்னேறியுள்ளதாக கூற/நம்பப் படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்தியாவில்தான், அரை மணிக்கு நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. மத்திய அரசு அமைப்பான தேசிய குற்றத்தகவல் ஆவண மையம் (National Crime Record Bureau) அளிக்கும் தகவலின்படி கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத்துறை புள்ளி விவரம் அளிக்கும் தகவல் இது என்றால் உண்மையான புள்ளிவிவரத்தை நாமே அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த நிலையில்தான் புதிய ஒரு அணு குண்டாக, “இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்” அறிமுகம் ஆகியுள்ளது.

இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்-உடன் கூட்டாக கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவற்றில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மட்டுமே இடதுசாரிகள் உள்பட பல அரசியல் கட்சிகளும், செய்தி ஊடகங்களும் எதிர்த்தும், ஆதரித்தும் பேசி வந்தன.

ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சற்றும் குறையாமல் நாட்டின் உணவு இறையாண்மையையும், பல கோடி விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கும் “இந்திய -அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்த”த்தை, பற்றி யாரும் சிறு மூச்சுகூட விட்டபாடில்லை.

“இந்திய-அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகதொடர்பிற்கான அறிவு முனைப்பு” (INDIA-UNITED STATES KNOWLEDGE INITIATIVE ON AGRICULTURAL EDUCATION, RESEARCH, SERVICE, AND COMMERCIAL LINKAGES) என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் “பசுமைப் புரட்சியின்” (GREEN REVOLUTION) வெற்றியை(!?) தொடர்ந்து “என்றென்றும்-பசுமைப் புரட்சியை” (EVERGREEN-REVOLUTION) ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதிய “என்றென்றும்-பசுமைப் புரட்சி”யானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்தோடு மட்டும் நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்:

· மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

· வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல்.

விதையற்ற பழங்கள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி என பல சாதனைகள்(?!) படைத்திருக்கும் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இந்த ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள், பட்டினிச் சாவுகள் போன்றவற்றை மரபணுமாற்று தொழில்நுட்பத்தினால் தடுத்துவிடலாம் எனவும் இவ்வொப்பந்தம் மறைமுகமாக நமக்கு ஆசை காட்டுகிறது.

இயற்கைவளங்களை கொள்ளைபோக அனுமதித்தல்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர்..

இதுபோன்ற இயற்கைவளங்கள் “முதலாம் பசுமைப் புரட்சி” காலகட்டங்களில் அமெரிக்காவால் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டன. ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் பாரம்பரிய தாவர வளங்களை எடுத்துச்சென்ற அமெரிக்கா, பின்னர் மஞ்சள், வேம்பு, புளி, பாசுமதி போன்றவற்றுக்கு காப்புரிமை கோரியதை இதற்கு சான்றாக கூறலாம்.

மூன்றாம் உலக நாடுகளிருந்து இயற்கைவளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கைவளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை (UNITED NATIONS) தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உள்ளடங்கிய பல்உயிரின ஒப்பந்தம் (CONVENTION FOR BIODIVERSITY) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

இன்று வரை இந்த ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்காவிடமிருந்து, இந்தியா எப்படி தன்னுடைய வளங்களை காக்க போகிறது என்பதை காலம்தான் கூற வேண்டும்.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களையும் (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திட, உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT,2002) இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களாக இரண்டினை கூறலாம்:

· நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்வது.

· நம் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை ஆராய நினைப்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் அமைந்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (BENEFIT SHARING).

மறைமுகமாக இந்த சட்டம் நம் இயற்கைவளங்கள் கொள்ளை போவதை அனுமதித்தாலும் குறைந்தபட்சம் மக்களுக்கு இழப்பீடு என்ற கருத்தையாவது ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்விரு முக்கிய அம்சங்களையும் கண்டுகொள்ளாத இந்திய-அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தம் குறைந்தபட்ச இழப்பீடு கூட மக்களுக்கு கொடுக்க மறுக்கிறது.

இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் முக்கிய பகுதியாக இரு நாடுகளை சார்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட்டாக சேர்ந்து இயற்கைவளங்களின் உயிரியல் மரபணு(GENE)வை ஆராய போகின்றன. அமெரிக்காவின் இயற்கை வளங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்வதற்கான வழிகள் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில் இந்தியாவின் இயற்கைவளங்களே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை கூறத் தேவையில்லை.

இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை.

இப்படி நம்நாட்டு சட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தகளுக்கு எதிராக இயற்கை வளங்களை எளிதில் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் காலம்காலமாக இவற்றை பாதுகாத்து வரும் நம் மக்களிடமிருந்து இவற்றை அமெரிக்கா கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் துணைபோகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஆராய்ந்து(!?) கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவதன் மூலம் தற்போது பொதுச்சொத்தாக உள்ள இயற்கை வளங்களை, அமெரிக்க மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

நிறுவனமயமாகும் வேளாண்மை

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் வேளாண்மை துறையை வணிகமயமாக்க, அறிவுசார் சொத்துரிமையின் தேவையை முன்வைக்கிறது. குறிப்பாக வேளாண்மை துறையில் காப்புரிமையின் அவசியத்தை கட்டாயமாக்குகிறது.

இது குறித்த விவரங்களை, “மாறும் சட்டங்களும் விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்” பகுதி 1, 2, 3, 4 ஆகிய பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் நம் நாட்டு வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயம் செய்ய மட்டுமல்ல; எப்படி காப்புரிமை பெறுவது என்பதையும் கற்றுக் கொடுக்க போகிறது. காப்புரிமை பெறுவது மட்டுமல்ல அதனை பன்னாட்டு மற்றும் இந்நாட்டு நிறுவனங்களிடம் எப்படி விற்பது என்பதையும் கற்றுக் கொடுக்கப்போகிறது.

இதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம்(INDIAN COUNCIL FOR AGRICULTURAL RESEARCH)கூட அறிவு சொத்துரிமைக்கான மேலாண்மை (INTELLECTUAL PROPERTY MANAGEMENT) என்ற சிறப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்புரிமை உள்ளிட்ட அறிவு சொத்துரிமைச் சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒரு தனி ஒப்பந்தமும் (MEMORANDUM OF UNDERSTANDING) 2006 ஆம் ஆண்டு கையெழுத்து ஆகியுள்ளது.

ஆக, இந்திய விஞ்ஞானிகள், நம்நாட்டு விதைகளை எடுத்து அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டறிந்து, அதற்கு காப்புரிமை பெற்று அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பதற்கான இந்த ஒப்பந்தத்திற்கு, நம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணம் சுமார் 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதி- திறமையின் அடிப்படையில் பயின்ற இந்த விஞ்ஞானிகளின் தேசப்பற்றை நிச்சயம் நாம் இந்த இடத்தில் நன்றியோடு நினைக்க வேண்டும்.

முடிவுரை

இந்த ஒப்பந்தம், வேளாண்மை நிறுவனமயமாவதற்கு மட்டுமே உதவும். மரபணுமாற்று பயிர்களை பெரு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயிரிட்டு ரிலையன்ஸ் பிரஷ், வால்-மார்ட் போன்ற விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்கு வைக்கபோகின்றன. பல மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்க செயற்கையாக நிறமூட்டப்பட்ட இந்த காய்கறிகளைத்தான் இனி நாம் உண்ணப்போகிறோம். இந்த விவசாய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விவசாயம் செய்ய புதிய வகை விவசாய கூலிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தபோகிறது.

காப்புரிமை பெற்ற இப்பயிர்களை விவசாயிகள் அதிக விலைகொடுத்து பயிர் செய்யவேண்டும், மேலும் மலட்டுதன்மை மிக்க இந்த பயிர்கள் மீது விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இருக்க போவதில்லை. ஆக உணவு உற்பத்திக்கே நாம் இனி நிறுவனங்களை தான் நம்பியிருக்க வேண்டும்.

இத்தகைய புரட்சிகரமான இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தத்தின் இந்திய அரசுத்தரப்பு கவுரவ ஆலோசகர் (Honorary Adviser) எம். எஸ் சுவாமிநாதனுக்கும் ஒரு சிறப்பு நன்றியை கூறிக்கொள்வோம்.

-மு. வெற்றிச்செல்வன்

17 comments:

மக்கள் சட்டம் said...
This comment has been removed by the author.
Unknown said...

மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி

இவை எங்கே உபயோகத்தில் உள்ளன.
உங்களுடைய வழக்கமான பாடலை தலைப்பினை மாற்றி பாடியுள்ளீர்கள்.
இன்னும் எத்தனை நாள் இப்படி
அரைவேக்காடு பதிவுகளை இடுவீர்கள்.
இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் அமெரிக்க ஆராய்ச்சி
நிறுவனங்களுடன் சேர்ந்து ஆராய
இது உதவும்.
அறிவுசார் சொத்துரிமையின் அடிப்படைகள் கூட தெரியாமல்
எழுதுபவர் எங்கே M.L (IPR)
படித்தார் என்பதை அறிய ஆவல்.

மக்கள் சட்டம் said...

//மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி...
இவை எங்கே உபயோகத்தில் உள்ளன.//

செய்தித்தாள்களை முழுமையாக படித்தால் உண்மைகள் தெரியும்.

//இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் அமெரிக்க ஆராய்ச்சி
நிறுவனங்களுடன் சேர்ந்து ஆராய
இது உதவும்.//

அதெல்லாம் சரிதான். அது சாமானிய இந்திய விவசாயிக்கு பயன்படுமா? என்பதுதான் கேள்வி.

//இன்னும் எத்தனை நாள் இப்படி
அரைவேக்காடு பதிவுகளை இடுவீர்கள்//

விவசாயிகளின் பட்டினிச்சாவுகள் நீடிக்கும்வரை.

அகராதி said...

பெரியார் என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டு சவுண்டித்தனம் செய்யும், பார்ப்பன-அமெரிக்க அடிவருடி கும்பல்களை அடித்து விரட்ட வேண்டும்.

இவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் அளித்து காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த மாமாக்களின் பின்னூட்டங்களை நீக்குவதே நல்லது.

Unknown said...

மலட்டு விதை என்று நீங்கள் பயமுறுத்தும் டெர்மினேட்டர்
தொழில்நுட்பம் நடைமுறையில்
இல்லை.அது போல் விஷமாக
பூக்கும் பருத்தி என்று எதுவும்
இல்லை. இதை மறுத்து ஆதாரம்
தர முடியுமா ?

பிடி பருத்தி பய்ரிடப்படும்
பரப்பளவு இந்தியாவிலும் அதிகரித்து
வருகிறது. கண்மூடித்தனமான
அமெரிக்க எதிர்ப்பு உதவாது.

M.L (IPR) என்று பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு
எழுதுகிறீர்கள். இந்தியாவில்
விதைக்கு காப்புரிமை பெற
முடியுமா?. இந்தக் கேள்விக்கு
சுற்றி வளைக்காமல் நேரடியான
பதில் தாருங்கள்.

“இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை”

நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்.
இந்தியாவின் உயிரினப் பன்வகைத்தன்மை சட்டம்
(Biological Diversity Act)
இது போன்ற ஒப்பந்தங்களுக்கும்,
ஆய்வுகளுக்கும் பொருந்தும்.மேலும்
ஆய்வு விதிகளை ICAR போன்ற
அமைப்புகள் வகுத்துள்ளன.
பிற நாடுகளுடன் இந்தியாவில்
உள்ள ஆய்வு நிறுவனங்கள் கூட்டாக
ஆய்வுகளை செய்துள்ளன, செய்து
வருகின்றன.
அறியாமை வைத்துக் கொண்டும்
அச்சப்படுத்தும் உங்களை இங்குள்ள
முட்டாள் 'முற்போக்குகள்' ஆதரிப்பது
பொருத்தமானதுதான்.

மக்கள் சட்டம் said...

ஆதிக்க மனோபாவத்துடன் வெறுப்பை உமிழ்வதை விட்டுவிட்டு உரிய ஆதாரங்களுடன் உங்கள் வாதங்களை முன் வையுங்கள், பெரியார் அவர்களே!

BT பயிரிட்ட பகுதிகளில் சாகுபடி குறைந்ததோடு, விவசாயிகளின் உடல்நலக்கோளாறுகள், கால்நடைகளின் மரணம் ஆகியவை குறித்து ஆதாரங்களை வழங்க நாங்கள் தயார்.

இந்தியாவின் உயிரினப் பன்வகைத்தன்மை சட்டம் குறித்த விமர்சனங்களை ஏற்கனவே முன்வைத்துள்ளோம். அதற்குரிய பதிலை இதுவரை யாரும் தரவில்லை.
{{//இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் அமெரிக்க ஆராய்ச்சி
நிறுவனங்களுடன் சேர்ந்து ஆராய
இது உதவும்.//

அதெல்லாம் சரிதான். அது சாமானிய இந்திய விவசாயிக்கு பயன்படுமா? என்பதுதான் கேள்வி. }}

இது நம் உரையாடல்தான். கேள்விக்கு என்ன பதில் நண்பரே!

தரக்குறைவான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது நண்பரே.

உண்மைப்பெயரை சொல்லக்கூட துணிவின்றி முகமூடிகளின் துணையோடு உலாவரும் நீங்கள் முகமூடிகளை விலக்க முயற்சி செய்யுங்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

"ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சற்றும் குறையாமல் நாட்டின் உணவு இறையாண்மையையும், பல கோடி விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கும் “இந்திய -அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்த”த்தை, பற்றி யாரும் சிறு மூச்சுகூட விட்டபாடில்லை."

தவறான செய்தி.இதை விமர்சித்து
பலர் எழுதியிருக்கிறார்கள்.பட்டியல்
தரவா?

இது போன்ற ஒப்பந்தங்களால் நல்ல
விளைவுகளும் இருக்கலாம், தீய
விளைவுகளும் இருக்கலாம்.எதையும்
ஆராயாமல் வெறுமனே எதிர்ப்பையும்,
வெறுப்பையும் கொண்டு எத்தனை இடுகைகள்தான் இடுவீர்கள்?.

இந்த இடுகையில் பல பொய்கள் உள்ளன.உதாரணமாக

1, விதைகள் மீதான காப்புரிமை- இந்தியாவில் சட்டப்படி அது இல்லை.

2, மலட்டு விதைகள்- கட்டுக்கதை,
அப்படி எதுவும் இல்லை
3, ஒப்பந்தம் விவசாயததில் காப்புரிமையை கட்டாயமாக்குகிறது-
இது பொய்.உலக வர்த்தக அமைப்பின்
அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம்
(TRIPS) கூட அவ்வாறு கூறவில்லை.

4,”அமெரிக்கா, பின்னர் மஞ்சள், வேம்பு, புளி, பாசுமதி போன்றவற்றுக்கு காப்புரிமை கோரியதை இதற்கு சான்றாக கூறலாம்”
அமெரிக்கா எப்போது அப்படிக் கோரியது.பிதற்றலுக்கு ஒரு
அளவு இல்லையா.காப்புரிமை
கோரியது தனி நபர்கள்/நிறுவனங்கள்,
அமெரிக்கா என்ற நாடு அல்ல.
அமெரிக்க அரசின் எந்த் துறையும்
இவற்றின் மீது காப்புரிமை கோரவில்லை.
எவற்றின் மீது, யார் என்ன காப்புரிமை
கோரினார்கள் என்பது கூட தெரியாமல்
பொய்களை எழுத வெட்கமாக இல்லையா.

நீங்கள் ஒரு வழக்கறிஞர் என்கிறீர்கள்.
உங்களின் பல இடுகைகளில் பொய்கள்,அரை உண்மைகள்,
அடிப்படையற்ற முடிபுகள் உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பதற்காக எத்தனை பொய்களை எழுதுவீர்கள்?. இந்த லட்சணத்தில்
மக்கள் சட்டம் என்று பெயர் வேறு.

உண்மையில் இத்தகைய இடுகைகள்
தவறான தகவல்களை தர,அர்த்தமற்ற
அச்சத்தினை உருவாக்க பயன்படுகின்றன.
உங்கள் வலைப்பதிவின் அறிவிக்கப்படாத நோக்கமே அதுதான்
என்று நினைக்கிறேன்.

அசுரன் said...

விதை நெல் சீர்திருத்தச் சட்டம் காப்புரிமையை வேறு வகையில் அமல்படுத்தும் திட்டமே. இதன்படி விவசாயிகளின் பாரம்பரியமான விதையின் மீதான் மரபுரிமை பறிக்கப்படுகீறது. இந்திய ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே சுரண்டலுக்கான சட்டத்தை உண்மையான சுரண்டல் நடப்பதற்க்கு முன்பே போட்டுவிடும், பிறகு சட்டம் போட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இது அன்றே போட்ட சட்டம் என்று சட்டவாதம் பேசும்.

இதுதான் விவசாயத்தை கூட்டிக் கொடுக்கும் விசயத்திலும் நடக்கீறது.

உணவை இறக்குமதி செய்கிறோமே அதற்க்கும் இந்த அனானி பதில் சொல்வாரா?

ஏற்கனவே நடந்த பசுமை புரட்சி தோல்வி என்பது குறித்து விவரங்கள் கொடுத்தால் இந்த அனானி ஒத்துக் கொள்வரா? ஏதோ ஆதாரங்கள் கொடுத்தால் நேர்மையாக ஒத்துக் கொள்வது போல போலி ஆவேசம் காட்டும் அனானி அப்பொழுது ஓடி ஒளிந்து கொள்வார்.

அசுரன்

//நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்.
இந்தியாவின் உயிரினப் பன்வகைத்தன்மை சட்டம்
(Biological Diversity Act)
இது போன்ற ஒப்பந்தங்களுக்கும்,
ஆய்வுகளுக்கும் பொருந்தும்.//

எல்லா சட்டமும் இருக்கத்தான் செய்யுது ஆனா அவையெல்லாம் ஏழைப்பட்டவனுக்கு ஆப்பு அடிக்க மட்டும்தான் நடமுறைக்கு வருது. 1990க்கு முன்பு இங்க பார்த்தீனியச் செடிகளை கொண்டு வந்தது, கருவேம்பை ஏரி குளங்களில் நடுவதன் மூலம் நீர் வளத்திற்க்கு ஆப்படித்தது, பசுமை புரட்சி என்ற பெயரில் இந்திய விவசாயத்தை தமது கேடு கெட்ட தடை செய்யப்பட்ட ரசாயனஙக்ளால் நாசம் செய்தது, ஆந்திர டெர்மினேட்டர் விதைகள், BT விதைகளாக் விவசாயிகள் நஸ்டம் அடைந்துள்ளதை மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட் நீதிமன்றங்களும் ஒத்துக் கொண்டு அந்த கம்பேனியை நஸ்ட ஈடு தரச் சொன்னது(தரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்). இப்படி உங்களோட சட்டம் அமலாகும் விதம் தெரிந்ததுதான். யூனியன் கார்பைடு தொழிற்சாலை விசம் கசியவிட்டு கொன்றதற்க்கு இன்றூ வரை உங்களது சட்டம் ஒரு மசிரும் பிடுங்கவில்லை. அதே கம்பேனி மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வசதியாக வழக்கையே கைகழுவிவிட திட்டமிட்டு வருகிறது இந்திய அரசு. இதுதான் அனானி சொல்லும் சட்ட நடைமுறையின் அருகதை.

இந்த இழவ வைச்சிக்கிட்டுதான் விவசாயத்த கூட்டிக் கொடுக்கீறதுக்கு அனானி ஆதரவு கொடுக்கீறாரு.

அசுரன்

Anonymous said...

ரவி அவர்களுக்கு

//1, விதைகள் மீதான காப்புரிமை- இந்தியாவில் சட்டப்படி அது இல்லை.//

TRIPS ஒப்பந்தம், இந்தியா உட்பட உறுப்பு நாடுகள் அனைத்தும் NON-BIOLOGICAL PROCESS –களுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் (Article 27.3.b of TRIPS Agreement) என்று கூறுகிறது.

NON-BIOLOGICAL PROCESS என்பது மரபனு மாற்று தொழில் நுட்பத்தை உள்ளடக்கியதே.

எப்படி இந்து என்பதற்கு, இஸ்லாமியர், கிறுஸ்துவர், பார்சி, யூதர் அல்லாத மற்ற யாவரும் இந்துகள் என்று இந்து சட்டங்கள் வரையறுத்துள்ளதோ. அதுபோல இந்திய காப்புரிமை சட்டமும் காப்புரிமை பெற கூடிய பொருட்கள் என்று நேரடியாக எதையும் கூறாமல், காப்புரிமை கொடுக்க கூடாதவை என்று பிரிவு 3-யில் சிலவற்றை குறிப்பிடுகிறது. அவற்றை தவிர்த்து மற்ற எல்லா கண்டுபிடிப்புகளும் காப்புரிமை பெற தக்கவை.

காப்புரிமை சட்ட பிரிவு 3-யில் உப பிரிவு (j), தாவரங்கள், விதை, BIOLIGICAL PROCESS-களுக்கு காப்புரி்மை இல்லை என்று கூறிய போதிலும் NON-BIOLOGICAL PROCESS-களுக்கு காப்புரிமையை மறுக்கவில்லை. ஆக NON-BIOLOGICAL PROCESS-யின் முடிவு பொருட்களான (End Product) விதை, தாவரங்களுக்கு காப்புரிமை பெற முடியும். அதாவுது செய்முறை மூலம் முடிவு பொருட்களுக்கே உரிமை கோர முடியும் (Process-by-Product).

மேலும் காப்புரிமை பெற முடியாத தாவர வகைளுக்கு SUI GENERIS முறையில் உரிமை வழங்க வேண்டும் என்றும் TRIPS ஒப்பந்தம் கூறுகிறது(Article 27.3.b of TRIPS Agreement).

இதன்படி THE PROTECTION OF PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT 2001, என்னும் சட்டத்தை இந்தியா இயற்றியது. இச்சட்டத்தின் கீழ் தாவரங்களை பதிவு செய்துக் கொள்ளும் ஒரு நபர் அல்லது நிறுவனம் காப்புரிமைக்கு ஈடாக, தான் மட்டுமே உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் உரிமையை பெறுகிறார் (Section 28. of PPVFR Act 2001). ஒரே வித்தயாசம் காப்புரிமை போல 20 ஆண்டு உரிமை கொடுக்காமல் இங்கு மரங்களுக்கு 18 ஆண்டு [Section 24 (6) (i)]உரிமையும், செடி வகைகளுக்கு 15 ஆண்டு [Section 24 (6) (ii)]உரிமையும் வழங்கப்படுகிறது.

//2. மலட்டு விதைகள்- கட்டுக்கதை, அப்படி எதுவும் இல்லை//

பி.டி விதைகளை மறுபயிர் செய்ய முடியுமா?

//3, ஒப்பந்தம் விவசாயததில் காப்புரிமையை கட்டாயமாக்குகிறது-
இது பொய்.உலக வர்த்தக அமைப்பின்
அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம்
(TRIPS) கூட அவ்வாறு கூறவில்லை.//

அமெரிக்காவின் TRADE ACT OF 1974,யில் SPECIAL 301 PROVISIONS, ஒன்று உள்ளது. இந்த பிரிவுன் நோக்கமே அறிவு செத்துரிமை சட்டங்களை பின்பற்றாத நாடுகளுடன் வணிகத்தை நிறுத்துவது தான்.

இதன்படி அமெரிக்காவுடன் வணிக்கம் செய்ய, உலக வங்கில் கடண் பெற வேளாண்மை மட்டும்மல்ல எல்லா துறைகளிலும்
அறிவு செத்துரிமை சட்டங்களை கட்டாயம் மாக்குவதை தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை.

மேலும் TRIPS ஒப்பந்தமும் அறிவு செத்துரிமையை உறுப்பு நாடுகள் கட்டாயம் நடைமுறைபடுத்த கூறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஒப்பத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு அறிவு செத்துரிமை உள்ளடங்கிய பயிற்சிகள் அளிப்பதற்கு 60 மில்லியன் ஒதுக்கப்ட்டுள்ளது.

மேலும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் (ICAR) ஆனையாளர் திரு மங்கலா ராய் வேளாண்மையில் அறிவு செத்துரிமை சட்டங்களை இன்னும் மேன்மை படுத்த வலியுருத்துகிறார். வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு காப்புரிமை படிவத்தில் TRUE AND FIRST INVENTOR என்று இடம்பெறுவது, காப்புரிமை வாங்குவது, விற்பது பற்றி IP MANAGEMENT வகுத்துள்ள GUDIELINES பற்றியும் குறிப்படுகிறார். மேலும் விவரங்களுக்கு பின் உள்ள இனையங்களை காணவும்.

http://www.assocham.org/green-revolution/docs/Speech_Mangla_Rai.doc

http://www.icar.org.in/miscel/icar-ipmttcguide.pdf

//அமெரிக்க அரசின் எந்த் துறையும்
இவற்றின் மீது காப்புரிமை கோரவில்லை.
எவற்றின் மீது, யார் என்ன காப்புரிமை
கோரினார்கள் என்பது கூட தெரியாமல்
பொய்களை எழுத வெட்கமாக இல்லையா//

மஞ்சள், பாசுமதி, புளி, வேம்பு போன்றவற்றுக்கு காப்புரிமை வாங்கியது இந்தியாவிருந்து அமெரிக்காவில் குடியேறிய NRI-கள் ( முற்றிலும் தகுதி திறமை அடிப்படையில் IIT.IIM,AIIMS, சேர்ந்து மக்கள் வரி பணத்தில் பயின்று அமெரிக்காவில் தேச சேவை செய்யும் இவர்கள் பனி தொடர வாழ்த்துகள்!) என்று எங்களுக்கும் தெரியும், அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றதும் தெரியும்.

அமெரிக்காவில் விளையாத மஞ்சள், பாசுமதி, புளி, வேம்பு போன்றவற்றுக்கு எப்படி அங்கு காப்புரிமை கொடுக்கப்பட்டது என்பது தான் என்னுடைய கேள்வி.

இந்தியாவில் காப்புரிமை பெற அந்த பொருள் உலகளில் வேறு எங்கும் காப்புரிமை பெற்றுயிருக்கவோ அல்லது அதன் பயண்பாட்டை யாரும் அறிந்திருக்கவோ கூடாது என்று பிரிவு 2 (1) (l) கூறுகிறது.

ஆனால் அமெரிக்காவில் காப்புரிமை பெற அந்த நாட்டில் அறிய படாத பொருளாக இருந்தாலே போதும் (35 U.S.C. 102). இப்படி உலகின் பல இயற்கை வளங்களுக்கு அமெரி்க்கா காப்புரிமை கெடுத்துள்ளது, அவ்வுரிமை மீறப்பட்டால் அதற்கு எதிராக பல வித தடைகளை எற்படுத்தவும் அன் நாடு முணைகிறது.

மக்கள் விரோதிகளை அடையாளம் காட்ட நாங்கள் எப்பொழுதும் வெட்கபட்டதில்லை.

This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

wie man in diesem Fall handeln muss? levitra kaufen levitra bayer 20 [url=http//t7-isis.org]levitra generika erfahrungen[/url]

Anonymous said...

A mio parere, si sbaglia. Sono sicuro. Dobbiamo discutere. Scrivere a me in PM, parlare. [url=http://lacasadicavour.com/cialis-generico/ ]comprare cialis sicuro [/url]Si sono errati. Io propongo di discuterne. Scrivere a me in PM, parlare. http://lacasadicavour.com/cialis-generico-online/ generico cialis A volte le cose accadere e peggio

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!