Thursday, July 12, 2007

கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.




அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பது கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)

நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது.

நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.

கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

குண்டர்கள் மூலம் மிரட்டுதல், வீடு மற்றும் தொழில்புரியும் இடங்களில் வாடிக்கையாளரை இழிவு செய்யும் நோக்கில் பேசுதல், நடத்தல் ஆகிய அனைத்தும் சட்டப்படி தவறானவை.

அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடன் வசூல் பணிகளை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடக்கும் வசூல் முகவர்களை (குண்டர்களை) ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க முடியும்.

காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)

கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

அந்தப்புகாரில் வசூல் முகவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.

காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.

மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள்.

கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நீங்கள் கையெழுத்திட்டாலும் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது.

கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.








-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
















(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும் )

12 comments:

Anonymous said...

கிரெடிட் கார்டு பிரசினை உண்மையிலேயே மிக மோசமான பிரசினைதான். நல்ல பதிவு. மேலும் விவரம் அளியுங்கள்.

நிரந்தர தீர்வுகளுக்கு வழியே இல்லையா?

Anonymous said...

கிரெடிட் கார்ட் போலவே இன்னோரு பிரச்சனை:

சில மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் முன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொல்வார்கள். அதில் "பயிற்சி காலத்தில் பணியை விட்டு அவர்களே நீக்கினாலோ அல்லது தாமாகவே நீங்கினாலோ. ரூ.XXXX நஷ்ட ஈடாக நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்" என்பது போல இருக்கும். சில நிறுவனங்கள் இதற்கு Suretyயாக தந்தையையோ வேறு யாரையாவதோ கூடுதலாக கையெழுத்திடச் சொல்வர்.

இத்தகைய சிக்கல் ஏற்பட்டு நிறுவனத்திலிருந்து Notice வந்த போது எனது வழக்கறிஞரை நாடினேன். அவர் சில சட்டப் பிரிவுகளை குறிப்பிட்டு இத்தகைய ஒப்பந்தம் One sided என்பதால் செல்லாது எனவும் கோர்ட்டில் எடுபடாது என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று நிம்மதி அளித்தார்.

இந்த பிரச்சனை பற்றி விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதுங்களேன்.

செந்தழல் ரவி said...

உண்மையில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான விவரங்களை தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்...

அனானி இரண்டு அவர்களின் பிரச்சினை இன்று நாட்டில் முக்கால்வாசி மென்பொருள் தொழிலாளர்களுக்கு இருக்கிறது...

இது குறித்து விரிவாக எழுதினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்...

இந்த பதிவை என்னுடைய பதிவில் லிங்க் தர விரும்புகிறேன்...

அனுமதிப்பீர்களா ?

மக்கள் சட்டம் said...

அன்புள்ள செந்தழில் ரவி அவர்களுக்கு,

இந்த வலைப்பதிவில் பதியப்படும் அனைத்து பதிவுகளும் மக்களின் சொத்துகளே. நாங்கள் எந்த கருத்தையும் கையில் வைத்துக்கொண்டு பிறக்கவில்லை. மக்களிடம் கற்றதை மக்களுக்கே கொடுக்க விரும்புகிறோம்.

எனவே தயக்கமின்றி பயன்படுத்தலாம்.

நன்றி.

-மக்கள் சட்டம் குழு.

நாமக்கல் சிபி said...

அருமையான தகவல்கல். சட்டம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி!

என்னுடைய வலைப்பூவிலும் உங்கள் வலைத் தளத்தின் தொடுப்பினைக் கொடுக்கிறேன்!

Suratha said...

உங்கள் சேவை மற்றும் வலைப்பதிவு
இன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமானது.அதற்காக நன்றிகள்.


உங்கள் வலைப்பதிவுக்கான ஒரு சிறு இலச்சினையை உருவாக்கி வழங்கினால் மற்றைய வலைப்பதிவுகளில் தொடர்பு, அறிமுகம் கொடுக்க இலகுவாயிருக்கும்.

SurveySan said...

கலக்கல் பதிவுகள்.

சல்யூட்ஸ்!

கோபி(Gopi) said...

மிக மிக தேவையான ஒரு வலைப்பதிவு. உங்கள் வலைப்பதிவு லோகோவை சிறியதாக்கி எனது வலைப்பதிவில் சுட்டியாக வைக்கிறேன்.

//அனானி இரண்டு அவர்களின் பிரச்சினை இன்று நாட்டில் முக்கால்வாசி மென்பொருள் தொழிலாளர்களுக்கு இருக்கிறது...

இது குறித்து விரிவாக எழுதினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்...//

இதை வழிமொழிகிறேன்.

மக்கள் சட்டம் said...

கிரெடிட் கார்ட் போலவே இன்னோரு பிரச்சனை:

சில மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் முன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொல்வார்கள். அதில் "பயிற்சி காலத்தில் பணியை விட்டு அவர்களே நீக்கினாலோ அல்லது தாமாகவே நீங்கினாலோ. ரூ.XXXX நஷ்ட ஈடாக நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்" என்பது போல இருக்கும். சில நிறுவனங்கள் இதற்கு Suretyயாக தந்தையையோ வேறு யாரையாவதோ கூடுதலாக கையெழுத்திடச் சொல்வர்.

இத்தகைய சிக்கல் ஏற்பட்டு நிறுவனத்திலிருந்து Notice வந்த போது எனது வழக்கறிஞரை நாடினேன். அவர் சில சட்டப் பிரிவுகளை குறிப்பிட்டு இத்தகைய ஒப்பந்தம் One sided என்பதால் செல்லாது எனவும் கோர்ட்டில் எடுபடாது என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று நிம்மதி அளித்தார்.

இந்த பிரச்சனை பற்றி விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதுங்களேன்.

-------------

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

தங்கள் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படும்.

Anonymous said...

thanks for ur information

ant said...

இன்றைய காலகட்டத்தில் மிக தேவையான வலைப்பதிவு.வாழ்த்துக்கள்

Hannah Zara said...

அன்புள்ள சர் / மேடம், "2 நாட்களுக்குள் கடன்களைக் கடனாகக் கடனாகச் செலுத்துகிறேன்", X-mas கடன், "வீட்டு கடன், வணிக கடன் 2% வட்டி விகிதத்தில். ,

முதல் பெயர்: .....
கடைசி பெயர்: ......
: COUNTRY .......
தொலைபேசி எண்:.....
OCCUPATION இல்: ......
வயது:.............
பாலுறவும்: ......
திருமண நிலை: ......
கடன் தொகை தேவை: ......
மாத வருமானம்......
கடன் கால அளவு: ......
மின்னஞ்சல்: hannahzaraloancompany@gmail.com, நன்றி மற்றும் கடவுள் ஆசீர்வதியுங்கள், கருணை

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!