Wednesday, November 24, 2010

பொதுமக்களுக்கான குற்றவியல் சட்டங்கள் – ஒரு எளிய அறிமுகம்

சட்டம் ஒரு இருட்டறை!” என்பது புகழ்பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாது!”. எனவே இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் "கிரிமினல் சட்டம்" எ ன்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான காலஅவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது.

ஆனால் குற்றவியல் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரசினைகள் வந்து நம்வீட்டுக் கதவை தட்டியபின்னர் அதற்கான தீர்வை தேடுவதைவிட பிரசினைகளை தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரசினைகள் வந்துவிட்டால் அதை எதிர்கொள்வதற்கான திறனை பெற வேண்டும்.

இதற்கான நோக்கத்தில் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்படுகிறது. குறைந்தது வாரத்திற்கு ஒரு அத்தியாயம் பதிவு செய்யப்படும். வாசகர்களின் கேள்விகளும், கருத்துகளும் இந்த தொடரினை செலுத்தும் திசைகாட்டிகளாக இருக்கும். எனவே உங்கள் கேள்விகளை இங்கே பின்னூட்டமாக இடலாம். இங்கே கேட்கமுடியாத தனிப்பட்ட கேள்விகளை mail@makkal-sattam.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தனிப்பட்ட முறையில் பதில் தர முயற்சிக்கிறோம்.

குற்றவியல் சட்டம் குறித்து ஒரு மேம்போக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். எனவே இதில் சொல்லப்படும் வழிமுறைகள் அனைத்து சமயங்களிலும் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தங்களுக்கு ஏற்படும் உண்மையான பிரசினைகளுக்கு அருகில் உள்ள வழக்கறிஞரின் உதவியை நாடுவதே முறையான அணுகுமுறையாக இருக்கும்.

இந்த எங்கள் பயணத்தில் வாசகர்களின் பங்களிப்பும் தேவையான அளவிற்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை துவக்குகிறோம்.

-"மக்கள் சட்டம்" குழு.

(அடுத்த பதிவு "புகார்" குறித்தது. எனவே வாசகர்கள் தங்கள் அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்)

23 comments:

உண்மைத்தமிழன் said...

துவக்குங்க துவக்குங்க.. நாட்டுக்கு அவசியம் தேவையானதுதான்..

Anonymous said...

1. மக்கள் சட்டங்களைத் தெரிந்து கொள்வதால் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதா?

2. காவல்துறையினர் தனி ஆளாக (மற்ற யாருக்கும் தெரியாமல்) கைது செய்தால் என்னென்ன செய்ய வேண்டும். ex. அவர்கள் நீட்டும் பேப்பரில் எல்லம் கையெழுத்து இடலாமா.

3. கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன (காவல்துறை & மக்கள்)

4. எதற்காக ஒருவரைக் கைது செய்யலாம்

மக்கள் சட்டம் said...

Anonymous said...

1. மக்கள் சட்டங்களைத் தெரிந்து கொள்வதால் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதா?

பதில்: ஏற்படாது. மக்கள் சட்டரீதியான உரிமைகளை தெரிந்து கொள்வதால் வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்யும்.

2. காவல்துறையினர் தனி ஆளாக (மற்ற யாருக்கும் தெரியாமல்) கைது செய்தால் என்னென்ன செய்ய வேண்டும். ex. அவர்கள் நீட்டும் பேப்பரில் எல்லம் கையெழுத்து இடலாமா.

பதில்: காவல்துறையினர் நீட்டும் பேப்பரில் கையெழுத்து போடுவதால் பெரிய இழப்புகள் ஏற்படபோவதில்லை. கைதின்போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை மீறினால் அதற்காக காவல்துறை மீது வழக்கு தொடுக்கலாம்.

3. கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன (காவல்துறை & மக்கள்)
பதில்: தனிப் பதிவாக வரும். (ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன)

4. எதற்காக ஒருவரைக் கைது செய்யலாம்
பதில்: கைது செய்வதற்குரிய குற்றம் செய்தால் ஒருவரை கைது செய்யலாம்.

கோரிக்கை: அனானியாக கேள்வி கேட்காமல் பெயருடன் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு ஆர்வமாக இருக்கும்.

Anonymous said...

நல்ல பணி. வாழ்த்துகள்!

Anonymous said...

எங்களது வீட்டின் அருகில் வசிப்பவர் , எங்களுக்கு உரிய நிலத்தில் (மேற்கூரை லிருந்து மழை நீர் ஊற்றும் இடம் ) காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார் .அதனை தட்டி கேட்டு சுவரை (சில ஹலோ பிரிக்ஸ் ) இடித்து விட்டேன் .இதை தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் என் மீது கொலை முயற்ச்சியில்(இடிக்கும் போடு அவர் அருகில் கூட இல்லை ) ஈடுபட்டேன் என்று பொய் புகார் கொடுத்தார்.புகாரை விசாரித்த சப் - இன்ஸ்பெக்டர், நிலத்தினை நில அளவினை செய்து இருவரும் அவரவர் நிலத்தினை எடுத்துகொள்ளும்மாறு இருவரிடமும் எழுதி கையொப்பம் பெற்று சமரசம் செய்து அனுப்பிவைத்தார் . இப்போது நில அளவின் போது எங்கள் நிலத்தில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது , இருவருக்கும் பொதுவான நிலத்தினைவும் ஆக்ரமித்து கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அவர் காம்பவுண்டு சுவர் இடிக்க மறுக்கிறார் . இப்போது காவல் துறையை அனுகுவதா? நீதி மன்றத்தை அனுகுவதா? இல்லையனில் காம்பவுண்டு சுவறினை நானே இடிக்கலமா ? இடிக்கலாம் என்றால் அதற்கு முன் செய்ய வேண்டியவை என்ன ? எங்கள் நிலத்தினை பெறுவது இப்படி ?
விளக்கமாக தெரிவிக்கவும்.

Mi said...

அருமையான் சேவை மனப்பான்மை தெரிகிறது உங்களின் இந்த இணைய தொடர்பு மூலமாக!

என்றென்றும் அன்புடன்
முகமது இக்பால்

prabu said...

i realy happy with this website

narayanan said...

thank you for your information i am very happy

sidiq.lpt said...

verygood goodjob thanks u r work congrates

Anonymous said...

oruvar vibathuku ulaki irukum pothu avaruku uthavi seiyamal vedikai parpathu kuttrama?kuttram illaya?

Unknown said...

வுங்கள் கட்டுரைகள் வாழ்கை பயனத்திர்கு மிகவும் வுதவிகரமாகிருக்கும். நன்றி.........

Unknown said...

sir vanakkam. Two wheeler la sellumpothu police kitta maatum poyhu theyvai illama emgala miratti panam pidungaraanga. so thappikka vali and rule sollunga pls

Anonymous said...

sir,வணக்கம் , சிவில் வழக்கு சம்மந்தமாக எனக்கு ஒரு திறமையான ,அனுபவரீதியாக மூத்த personal advocate தேவை சார் எனக்கு சிவில் சம்மந்தமாக வழக்குகள் நிறைய உள்ளன. எனக்கு சார் அவர்களின் தொலைபேசி எண் , முகவரி தந்தால் நான் நேரியிடையாக சென்று அவரை சந்தித்து என்னுடைய சிவில் வழக்கு சம்மந்தமாக வழிமுறைகளை கையாளுவேன் , சார் தாங்கள் எனக்கு உதவ வேண்டும் , என் பெயர் கலை DCT, PGDCA, MA(SOCIO),

Sundararajan P said...

கலை, நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பதை கூறாமல் எப்படி உங்களுக்கு வழக்குரைஞரை பரிந்துரை செய்ய முடியும். மாலை நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். சுந்தரராஜன் 90945 96699

Anonymous said...

வழக்கறிஞர் சார் உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி உங்களை சனி ஞாயிறு நாட்களில் சந்திக்கிறேன் சார்

Unknown said...

முந்தைய பதிவில் அணைத்து நண்பர்களும் பூர்விக சொத்தை பற்றி மட்டுமே விளக்கம் கூறினர் ( அப்பாவின் சுய கிரையம் பற்றி கூறவில்லை)
ஆகையால் மறுபதிவு செய்கிறேன்

எனது தந்தை என்னிடம் கூறியது :
(திருமனத்திற்கு பின் அப்பா,அம்மா இருவரால் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும் )

1. வாய் முலமாக பேசி agreement கிரையம் என கூறி சுத்த கிரையம் என ஏமாற்றி எழுதியுள்ளனர்

2.அப்பா உயிருடன் இருக்கும் போதே காவல் துறையில் புகார் செய்யப்ட்டு உள்ளான. பின் கிராம பஞ்சாயத்தில் பிரச்சனை இல்லாமல் சமதானமாக முடித்துக்கொள்கா எண காவல் துறையினர் அனுப்பிவிட்டனர்

3. இதில் சென்ற வருடம் அப்பா மன உழைச்சல் காரணமாக கோம நிலையில் காலமானர் (8.2.14)

4. சென்ற 03.11.14 அன்று வேர ஒரு நபருக்கு கிரையம் செய்துள்ளார்

5. அப்பா இருக்கும் வரைக்கும் எந்த செயலிலும் ஈடுபடவில்லை(எதிர்தரப­­்பினர்)
அப்பா இறந்த பின்னரை ஈடுபட்டுள்ளார்

6. இதில் எனது (அம்மா,அக்கா 2 பேர் மற்றும் தங்கை நாண் ) குடும்பத்தினர் யாவரும் கையோப்பம்(sin) இடவில்லை

7. மேற்படி அம்மாவின் கையொப்பம்(sin)இல்லாம­ல் அப்பா எழுதிய கிரையம் சட்டபடி செல்லும்மா செல்லதா

8.எனவே Sir
வழக்கு தொடர சாத்தியமா, அவ்வாறு தொடங்கும் வழக்கானது (கால தாமதமின்றி ) 2 வருடத்திற்க்குள் முடிக்க சாத்தியமா

பதில் கூறுங்கள் நண்பறே..............­.

அவருடைய சுயார்ஜிதம் யாருக்காவது விற்கலாம்.வழக்காடினாலும் பலனில்லை....

Unknown said...

ஐயா,
எனது ஊர் தஞ்சாவூரில் உள்ள ஓர் கிராமம் எங்கள் ஊர் கோவில் கடந்த ஆறு மாத காலமாக பூட்டிக்கிடக்கிறது.
கிராம மக்களால் பூசாரியாக நியமிக்கப்பட்டவர் ஒரு சில தனிப்பட்ட காரணங்கள் காட்டி திறக்க மறுக்கிறார்.
காவல் துறை வேறு ஒரு வழக்கில் 107 வழக்கு இருப்பதால் திறக்க இயலாது என்று சொல்கிறார். தினசரி நடைபேறும் பூஜைகள் நடை பெற வில்லை.
கோவில் கிராம கோவில்
அறநிலையத் துறைக்கு சம்மந்தம் இல்லை
தனி மனிதனாக நான் எங்கள் ஊர் கோவிலை வழி பட இயல வில்லை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.
விளக்கம் தேவை.

strlsaravanan said...

Sir,
Wishing you all Success to create this web for the public Welfare basis.., thanks a Lot Sir..
I am an graduate civil engineer, interested to study/learn the laws. So kindly tell me your tips as like " valuable guidance" about: how i can study the law courses in part time basis and the universities about, steps to study the law studies regarding Sir....
my personal mail id: strlsaravanan31@gmail.com
Regards
S.Saravanan

Unknown said...

எங்கள் ஊரில் அனைவரும் ஒரே சமுகத்தினர் நாங்கள் மட்டும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் எங்கள் உரிமை தட்டிகளிக் கிண்டனர் அனைத்தும் இருக்கின்றனர் ஆனால் உரிமை பெற முடியவில்லை சட்டத்தின் முன் அவர்களை எப்படிநீர்த்துவது

Laks-library said...

It is a good social service too. I wish all the best for your service to reach as many people as possible. Let me also receive your notifications. Thanks.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!