Monday, July 2, 2007

கிரெடிட் கார்டு - வெளியார் நடத்தும் மோசடிகள்! (வீடியோ காட்சிகளுடன்)

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல, வேறுபலரும் நம்மை கொள்ளையடித்து வருகின்றனர்.PHISHING மற்றும் SKIMMING ஆகிய பெயர்களில் இந்தக் கொள்ளைகள் நடைபெறுகின்றன.

PHISHING என்பது வங்கிகளின் இணையதளத்தை போன்ற போலிதளங்கள் மூலமும், SKIMMING என்பது கிரெடிட் கார்டையே சட்ட விரோதமாக நகலெடுத்தும் மோசடி செய்வதாகும். இணையம் மூலமாக வங்கிப்பணிகளை மேற்கொள்வோரே PHISHING என்ற முறைகேட்டால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

வங்கிகளில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, ஒரு (மர்ம) மின்னஞ்சல் வரும். அதில், அந்த நுகர்வோருக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் அதைப் பெற்றுக்கொள்ள, மின்னஞ்சலின் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். அந்த இணைப்பில் வங்கியின் இணையதளத்தைப் போன்ற ஒரு போலி இணையதளம் இருக்கும். அந்த இணையதளத்தில் உங்கள் கணக்கு எண், அதன் PIN நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை நீங்கள் அளித்துவிட்டால், உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் "அபேஸ்" ஆகிவிடும். அடுத்தவர் பணம் மீது பேராசை கொண்ட வாடிக்கையாளர்களே இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அவ்வாறு பேராசை கொண்ட வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எவ்வாறு மோசடிக்காரர்களுக்கு தெரிந்தது? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மோசடிக்காரர்களுக்கு கிடைத்ததில் வங்கி அதிகாரிகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
இது எப்படி இருப்பினும், வங்கியின் இணையதளத்திற்குள் லாக்-இன் செய்ய தேடுபொறிகள் மூலம் நேரடியாகத்தான் செல்லவேண்டும். இதுபோன்ற மெயில்களில் உள்ள இணைப்பு மூலமாக திறக்கும் இணைய தளங்கள் போலியானவை என்பதை புரி்ந்து கொள்ள வேண்டும்.

SKIMMING என்ற பெயரில் கிரெடிட் கார்டையே நகலெடுக்கும் மோசடி மிகவும் நூதனமானது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறமுள்ள கருப்பு நிற காந்தப்பட்டையில்தான் வாடிக்கையாளரின் அனைத்து ரகசிய விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரகசிய விவரங்களை நகலெடுக்கும் வெளிநாட்டுக்கருவிகள் சுமார் 19,000 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.






அமெரிக்காவில் கிடைக்கும் இந்த கருவிகளை ஆன்லைன் மூலமாக யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இந்த கருவியை பயன்படுத்தி ஒரு கிரெடிட் கார்டின் ரகசிய தகவல்களை கவர்ந்தபின், ஒரு கம்ப்யூட்டருடன் அக்கருவியை இணைத்து குறிப்பிட்ட கிரெடிட் கார்டின் அனைத்து தகவல்களையும் அறிய முடியும். பின்னர் இந்த தகவல்களை வெற்று கார்டுகளில் பொருத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியும். இதற்கான வீடியோ காட்சியை காண கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
















இவ்வாறு வாடிக்கையாளர் ஒருவரின் ரகசிய விவரங்களையும் திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டவர்கள், வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் மோசடியாக கவர்ந்து விடுகின்றனர்.









இது போன்ற மோசடிகள் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு இத்தகைய மோசடியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.









எனினும் இதுபோன்ற செய்திகள் வெளிவராமல் தடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற செய்திகள் வெளியானால் கிரெடிட் கார்டு விற்பனையும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி நடைபெறும் வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இதுபோன்ற செய்திகள் புறக்கணிக்கப் படுகின்றன.

ஆக, வாடிக்கையாளர் நலனைவிட, வர்த்தகமும் (கொள்ளை) லாபமுமே கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக உள்ளதை அனைவரும் அறியலாம். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் வங்கிகளிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருந்தால் போதாது; கிரெடிட் கார்டை பயன்படுத்தும் அனைத்து தருணங்களிலும், அனைத்து நபர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் கண்பார்வையிலேயே கிரெடிட் கார்டுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே பாதுகாப்பானது.


-சுந்தரராஜன்




கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

4 comments:

Anonymous said...

கிரெடிட் கார்டுகள் குறித்த குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வீடியோ படங்களுடன் மிக நல்ல பதிவு. இது போன்ற பிரசினைகளில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளும் இடம் பெற்றால் பதிவு முழுமை பெறும்.

தங்கள் பணி சிறக்கட்டும்.

Anonymous said...

useful news
continue ur job..
thank you

Anonymous said...

Wonderful posting.
Keep it up.
I'll write more after seeing the website.

Sundararaman,
Chennai

Anonymous said...

எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் நன்மைகளுக்கு ஈடான தீமைகளையும் கொண்டுவரும் என்பதற்கு கிரெடிட் கார்டே சாட்சி.

கிரெடிட் கார்டு வாங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள். நன்றி.

உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!