Saturday, September 8, 2007

மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன?

பயிற்சி முடித்த மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

தங்களுடைய கல்விக்காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீடிக்கக்கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: தினமணி, 8 செப்டம்பர் 2007

மாணவர்களின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் இடதுசாரிகளின் கருத்தை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


நன்றி: தினமலர், 8 செப்டம்பர் 2007

இந்தப்பிரசினை மருத்து மாணவர்கள், இடதுசாரிகள், தமிழக முதலமைச்சர் மட்டுமே சார்ந்த விவகாரம் அல்ல. கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரசினை.

விவசாயத்திற்கான மானியங்கள் வெட்டு, மின்வெட்டு, நீர் ஆதார பிரசினைகள், மரபணு தொழில் நுட்பத்தின் படையெடுப்பு, மணல் கொள்ளை போன்ற பலவித பிரசினைகளில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்கவிடாமல் செய்வதில்தான் நம் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை ஆர்வம்?


பசுமை விகடன் இதழில் வெளிவந்த அந்த விவசாயிகளின் குரலை சற்று கேட்போமா?








ச்சும்மா சிரிச்சிட்டு போயிடாதீங்க சித்தப்பு.... சிந்திங்க!


ஓவியம்: ஹரன் (HARAN)
நன்றி:


செப்டம்பர் 25, 2007

மருத்துவ மாணவர்களுக்கு பரிந்து பேசும் இந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

-மக்கள் சட்டம் குழு

18 comments:

அகராதி said...

நல்ல சிந்தனை. நாளும் வளரட்டும் உங்கள் மனிதநேய சிந்தனை

Anonymous said...

ஆனந்தவிகடன் மூலம் உங்கள் பிளாக் குறித்து அறிந்தேன். இப்போது உங்கள் பிளாக் மூலம் பசுமை விகடன் குறித்து அறிந்தேன்.

நல்ல பணி. வாழ்த்துக்கள்

மாசிலா said...

எளியவர்களை, ஏழைகளை, தலித் மக்களை புறந்தள்ளிவிட்டு சீட்டுகள் பிடித்து, அவர்கள் உழைப்பில் கிடைக்கும் அனைத்தும் சுகங்களையும் அனுபவித்துவிட்டு, பொது மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு அதே ஏழை கிராம மக்களுக்கு சேவை செய்ய மாட்டேன் என்பது தேசத்துரோகம் போன்றது.

மருத்துவத்தில் மட்டும் இது போல் இல்லாமல் அனைத்து துறைகளிலும் இது போன்ற முறைகளை கொண்டுவந்து கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

G.Ragavan said...

அன்புமணி கொண்டு வர நினைக்கும் திட்டம் நல்ல திட்டம். ஆனால் ஏற்கனவே ஐந்து வருடப் படிப்பு. அதில் ஓராண்டு பயிற்சி. அந்த ஓராண்டு பயிற்சியில் அவர்களைப் பல இடங்களுக்கும் அனுப்பலாம். அது நல்ல திட்டமாக இருக்கும்.

அதே நேரத்தில், இதை மருத்துவம் மட்டும் இல்லாது...எல்லா நிலைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சம்...ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும்...அவரது தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசு ஊழியர்களில் சிலருக்கு அரசு வீடுகளும் வாகனங்களும் உண்டு. அதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தையும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் போட வேண்டும்.

Anonymous said...

Very good question. But who is going to answer?

Anonymous said...

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கிராமப்புற சேவைக்கு செல்லமாட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது.

இவர்களை கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்ப வேண்டும்.

Anonymous said...

It is a right thing, not only the doctors, but also to be extended to other areas like engineering and other technical fields also. It should be made mandatory that those who get the seat through reservation and gets the scholarship for the studies should be made to work Compulsorily in the villages, since they are getting favor from the government and enjoy the tax money of the public.

Prabhu said...

Medical Students should Obey the Rules of Central Govt...

அகராதி said...

//படித்து முடித்துவிட்டு ஒரு வருடம் கிராமப்புறத்தில் போய் வேலை செய்ய ஏன் கசக்கிறது?
நிச்சயம் ஒரு வருடம் அங்கு வேலை செய்தால்தான் மேல் படிப்புக்கோ அல்லது வெளி நாட்டில் சென்று சம்பாதிக்கவோ முடியும் என்று ஆணை ஒன்று பிறப்பிக்க வேண்டும்//

ரிப்பீட்டேய்

Anonymous said...

எத்தனை வக்கீல்கள் கிராமத்தில் பணி செய்கின்றனர்?

எத்தனை ஆசிரியர்கள் கிராமத்தில் பணி செய்கின்றனர்?

டாக்டர்கள் மட்டும் ஏமாளியா?

Anonymous said...

தொட்டதுக்கெல்லாம் அமெரிக்காவை பார்னு சொல்வாங்களே!

கீழே இருப்பது ஹார்வர்டு பல்கலைகழக தளத்திலிருந்து எடுத்தது.
மருத்துவ கல்லூரி அட்மிசன் கொடுக்கும் முன்பே, அந்த ஆள்
சமூகத்துக்கு சேவை செய்வானா, மருத்துவ படிப்புக்கு ஏற்றவனா
என்று பார்த்துதான் சீட் கொடுக்கிறார்கள்.

In addition to academic records, the information considered
by the Committee on Admissions includes the essay written
by the student, MCAT scores, extra-curricular activities,
summer occupations, and life experiences. Any experience
in the health field including research or community work
is also noted, as well as the comments contained in the
letters of evaluation. We look for evidence of integrity,
maturity, concern for others, leadership potential, and
an aptitude for working with people.

நம் ஆட்களை திருத்தணும் என்றால் பள்ளியிலிருந்தே சமூக சேவை கட்டாய
பாடமாக்க வேண்டும். மேலிருந்து கீழே வரை selfishness தான் ஊறிப்
போயிருக்கு.

Anonymous said...

சார் உங்களை பொடா சட்டத்தில உள்ளுக்கு போடுவாங்க!

ஒரு ஈழத் தமிழன்

seethag said...

i am very impressed by your blog, even though i am not entirely areeing with your view point.
1st...doctors going to villages. my father worked almost all of his medical career as govt doctor,in villages. i went to schools where the class room was some shade under trees.
to a great extent my education was home based.i wanted to do what my father did, but good or bad i didnot get into public service so lost the chance of working in villages.now it is utmost important that medical graduates understand that they are accountable to the patients from whom they learn.however this'going to village law' has already been there, but couldnot be implemented due to our common corruption. my father couldnot even complete terms properly as someone who wanted to do private practice will bribe the local minister and get postings and we will be transferred. this happens even today. so all thsoe doctors who are nto interested in bribing will go to villages unwillingly ,take leave and the system will rot.when apparently there is corruption in getting into madras medical college specifically as a student ,how do you think there is going to be faireness?regarding aptitude, you can assess all that but after graduation in western countries as well the same problem of doctors not going to rural area exists.
if you ask me, first while they are medical students ,they need to learn to respect the poor patients, get their permission to examine, give more rights to patients to agree or refuse to be part of education.
secondly,make medical ethics as a subject should be taught more vigorously.a very good story is sujatha's nagaram. it is so crystal clear to see how docotrs have no clue about the cultural ,economic issues of patients.
three, doctors will go abroad, as life is competitive for them and much more tuff.HOWEVER there is a way of addressing this issue.it is just as govt is thinking of imposing tax on business schools,and iit graduates who leave the country, doctors ,i mean govt students who leave for abroad, should pay after they go to greener pastures.this money can be very well used to address our abyssmall inadequate health funding.

regarding the sidda issue that you have raised in your previous post...

totally agree that quacks should be done with. but did our olden day sidda vaidyars have the qualification that you are talking about. china had a concept called barefoot doctors.these 10th passed people could have very well filled in that role. i am not sure this whole worry about quackery is needed.one of my friends has trained so many +2 passed dalith young people in allopathy based medicine. diagnostics, treatement etc, so that they can be of use to some of our villagers. they are doing good job. they are pretty safe.
the whole issue of money comes because doctors have made medical practice very exclusive.
when i was getting trained there was a famous book which some of us cherished..it is called' where there is no doctor.'i do beleive monopoly has to be addressed.

Anonymous said...

//நல்ல சிந்தனை. நாளும் வளரட்டும் உங்கள் மனிதநேய சிந்தனை//

Repeatey....

Anonymous said...

//நல்ல சிந்தனை. நாளும் வளரட்டும் உங்கள் மனிதநேய சிந்தனை//

Repeatey....

Anonymous said...

FOr the two sides of coin, see my views at

http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

Anonymous said...

//இவர்களை கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்ப வேண்டும்.//

:-)

Anonymous said...

விரும்பினாலும் வேலை கொடுக்க இயலாத நிலையில் அரசு இருக்கும் போது இந்த சட்டம் அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பாக பணம் செய்ய வழி காட்டும்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!