செப்டம்பர் 5, 2007
சென்னை
சென்னை
அனுப்புனர்
பி. சுந்தரராஜன்,
நிர்வாக அறங்காவலர்,
சமூக-பொருளாதார நீதிக்கான மையம்,
1- P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.
பெறுனர்
துணை ஆணையர் 1,
(பொதுத்தகவல் அலுவலர்)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நிர்வாக அறங்காவலர்,
சமூக-பொருளாதார நீதிக்கான மையம்,
1- P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.
பெறுனர்
துணை ஆணையர் 1,
(பொதுத்தகவல் அலுவலர்)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
எழிலகம், 4வது தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.
ஐயா,
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6ன் படி தகவல்
கோரும் மனு.
---
எழிலகம், 4வது தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.
ஐயா,
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6ன் படி தகவல்
கோரும் மனு.
---
தங்கள் துறை சார்பாக கடந்த 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த கீழ்க்கண்ட தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)
2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?
3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?
4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?
5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?
6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?
7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?
8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?
மேலேக்கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
(பி. சுந்தரராஜன்)
இந்த பதிவு புரியவில்லை என்பவர்கள் முந்தைய பதிவை படித்தபின் இந்த பதிவை படித்தால் புரியும். இந்த மனு இன்று அனுப்பப்படுகிறது. இந்த மனுவிற்கான எதிர்வினைகளும் பதிவு செய்யப்படும்.
-மக்கள் சட்டம் குழு
10 comments:
ஆப்பு வச்சு இருக்கீங்க.
பாப்போம் என்ன சொல்றாங்கன்னு
அருமையான பணி
சொல்லிய வண்ணம் செயல்.
உங்கள் கேள்விகளை பதிவாக மட்டும் போடாமல் ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தி உள்ளீர்கள், நல்ல பணி தொடருங்கள்.
தகவல் உரிமைச் சட்டம் குறித்த பழைய பதிவில் அதில் நம்பிக்கை இல்லாதது போல் எழுதி உள்ளீ்ர்கள். தற்போது அதை பயன்படுத்தி உள்ளீர்கள். ஏனிந்த குழப்பம்? வழக்கறிஞர் என்றாலே குழப்பம்தானா?
தகவல் உரிமைச் சட்டத்தை இப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமா? என்பதை யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
இதைப்பார்த்தபின் எனக்கும் தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் எண்ணம் தோன்றியுள்ளது.
நன்றி சுந்தரராஜன்.
-பாலா (என்னை நினைவிருக்கிறதா?)
மிக நல்ல பதிவு. நல்ல பணியும்கூட.
தகவல் உரிமை சட்டம் குறித்தும், அதை பயன்படுத்துவது குறித்தும் விரிவான பதிவு ஒன்றை போடுங்களேன். தங்கள் விமரிசங்களையும் எதிர்பார்க்கிறோம்.
-இனியவன்
சாதிக்கொரு சங்கம் உண்டு!!
வீதிக்கொரு கட்சி உண்டு!!
நீதிசொல்ல மட்டும் இங்க நாதியில்ல!! - உங்களை போல் வழக்கறிஞர்களின் பணிகளை காணும் பொழுது நம்பிக்கை வேர் விடுகின்றது
பணி மேன்மேலூம் சிறக்க வாழத்துக்கள் வாழீய பல்லாண்டு
நல்ல பதிவு
Editor sir, அவர்களுக்கு வணக்கம், Employment office க்கு (regarding LA Register) ஒரு கடிதம் போட்டு ஆறு மாதம் ஆகிறது.அதனுடைய நிலைமை என்ன என்று தெரியவில்லை. தயவு செய்து எப்படி தகவலறியும் உரிமை சட்டத்திற்கு கடிதம் எழுதுவது என்று தெரியபடுத்தவும் or Email id க்கு format of form அனுப்பி வைக்கவும்,Vel
nandru. ithu pondru samaniyanum தகவல் பெறும் உரிமைச் சட்டம்
Moolam தகவல் pera Mudiyuma.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!