Friday, July 18, 2008

தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே முதன்மையானது. இங்கு மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.

அவ்வாறு இணையதளம் எதுவும் நமக்கு புலப்படாத நிலையில் நமது முதல் கேள்வியே மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் இணையதளம் குறித்ததாக அமைந்தது. கேள்விகள் 25-06-2008 அன்று அனுப்பப்பட்டது. அதற்கான பதில் 11-07-2008 அன்று கையெழுத்தாகி 18-07-2008 அன்று நம்மை வந்தடைந்தது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்தில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், பொது தகவல் அதிகாரியுமான Dr. S.கீதாலட்சுமி , MD அவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்.

இனி கேள்வியும், பதில்களும்.

கேள்வி 1. தங்களது கல்வி நிறுவனத்திற்கு இணையதளம் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் பெயரை தெரிவிக்கவும். இணையதளம் இல்லையென்றால் அவ்வாறு இணையதளத்தை அண்மையில் ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளதா?

பதில் : இணையதளம் உள்ளது! http://www.mmc.org/
(தவறான தகவல்! இந்த இணைய தளம் இங்கிலாந்திலுள்ள Maine Medical Centre என்ற அமைப்பினுடையது)

கேள்வி 2. தங்கள் துறைக்கு பொதுத்தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெறச் செய்வீர்களா?

பதில் : இணையதளம் இல்லாததால் இந்த பிரசினை எழவில்லை!
(முதல் கேள்வியில் இணையதளத்தின் பெயரை எவ்வாறு கொடுத்தார்கள்?
அடுத்த கேள்வியிலேயே இணையதளம் இல்லை என்பதை எவ்வாறு உணர்ந்தார்கள்? தலை சுற்றுகிறது!)

கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?

பதில் : பட்டமேற்படிப்பு கல்விகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை – 34 எண்ணிக்கை. (M.D)
( M.S. என்ற பெயரில் நடத்தப்படும் படிப்புகள் குறித்து துணை முதல்வருக்கே தெரியாது போலும். அவை எந்தெந்த துறைகளில் நடத்தப்படுகிறது என்ற தகவலை எங்கே, யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை)

கேள்வி 4 . பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களது பெயர், கல்வித்தகுதி, பதவி ஆகியவற்றை வழங்கவும். இவற்றில் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன? அந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? துறைவாரியான தகவல்களை தரவும்.

பதில் : 586. பணிமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவ கல்வித்துறை இயக்குனரிடமும் உள்ளது.
(கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு துணை முதல்வருக்கு கல்வி அறிவு இல்லை போலுள்ளது!)

கேள்வி 5. பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.

பதில் : 439 தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(துறை வாரியாக கணக்கெடுக்கும் அளவிற்கு ... என்னத்தை சொல்றது..போங்க!)

கேள்வி 6. மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.

பதில் : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
(அந்த விதியைதாங்க கேட்டோம். அதைச் சொல்லுங்க!)

கேள்வி 7 முதல் 18 வரை உள்ள கேள்விகளை முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை-3 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
(தகவல் உரிமைச் சட்டம், பிரிவு 6(3)ன் படி கோரப்படும் தகவல் வேறொரு அதிகார அமைப்பிடம் இருக்கும்போது தகவல் கோரும் விண்ணப்பத்தை , அது எந்த துறைக்கு செல்லவேண்டுமோ அந்தத்துறைக்கு
5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த தகவலை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டவிதிகள் பின்பற்றப் படாததோடு, மனுவைப் பெற்று சுமார் 15 நாட்களுக்கு பிறகு பதில் தயாரிக்கப்பட்டு ,கையெழுத்தாகி அதன்பிறகு ஒரு வாரம் கழித்தே அந்த பதில் நம்மை வந்தடைந்தது)

மேற்கண்ட விவகாரங்களை விளக்குமாறு மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பப் பட்டுள்ளது. அதற்கான பதில்களும், தொடர் நடவடிக்கைகளும் இங்கு வெளியிடப்படும்.


-மக்கள் சட்டம் குழு

19 comments:

Anonymous said...

// அது எந்த துறைக்கு செல்லவேண்டும் என்பதை 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். //

நான் கேள்விப்பட்டது, 5 நாட்களுக்குள் அந்த துறைக்கு அந்த மனுவை மேலனுப்பி அதன் நகலை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும் என்பது. (வெறுமனே மனுதாரருக்கு தெரிவித்தால் மட்டும் போதாது)

யாத்ரீகன் said...

Very good job by you guys... its pathetic to know that people at management take everything so easy and irresponsible..

வெங்கட்ராமன் said...

இங்கே சொல்லப்பட்ட பதில்களும் அதற்கு உங்கள், விமர்சனமும் சிரிப்பை வரவழைத்தாலும் வருத்தத்தையும் வரவழைக்கிறது.

உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

Voice on Wings said...

"அந்த இன்னொண்ணு தாங்க இது"ங்கிற மாதிரி பதில் சொல்லியிருக்காங்க.

//பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்?//

//பதில் : 586//

//பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?//

//பதில் : 439//

மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது?

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.

Anonymous said...

//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது?

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.
//

மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள்

அவர்களின் பதவிகள்

1. Tutor
2. Assistant Professor
3. Associate Professor
4. Reader
5. Professor

அவர்களின் பணி
1. சிகிச்சை
2. போதிப்பது

வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் வேலை அல்ல.
(3 துறைகளில் - anatomy, physiology, pharmacology - மட்டும் தான் அவர்களுக்கு பாடம் மட்டுமே பணி.)

அந்த மருத்துவக்கல்லூரியை சார்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது
இந்த ”ஆசிரியர்கள்” தான்

இதற்காக தமிழகத்தில் அவர்களுக்கு அதிகம் ஊதியம் அளிக்கப்படுவது கிடையாது.

பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரி போல் பாடம் நடத்துவது மட்டும் வேலை அல்ல.

பல பட்ட மேற்படிப்பு பிரிவுகளில் மாணவர்களே கிடையாது.

உதாரணம்

1. Clinical pharmacology,
2. Endocrinology,
3. Neonatology,
4. Neuroradiology
5. Bio-physics,
6. Community Health administration,
7. Health administration,
8. Hospital administration,
9. Lab medicine,
10. Nuclear Medicine
11. Physical Medicine and Rehabilitation

ஆனால் ஆசிரியர்கள் உண்டு. அவர்களின் பணி நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது

இதனால் தான் நீங்கள் தவறாக் புரிந்து கொண்டுள்ளீர்கள்

அடுத்ததாக மருத்துவத்தை பொறுத்த வரை இந்திய மருத்துவ கவுன்சலின் அறிவுரை படி பட்ட மேற்படி இடங்களில் மாணவர் ஆசிரியர் விகிதம் என்பது 1:1 இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு இரு மாணவர் வரவே முடியாது :) :). ஆசிரியரின் எண்ணிக்கையை விட (பட்ட மேற்படிப்பு) மாணவர்களின் குறைவாகத்தான் இருக்கம்.

இது மற்ற பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரிகள் போலில்லை
--
சந்தேகம் தீர்ந்ததா ??
--
பின் குறிப்பு : நான் மருத்துவக்கல்லூரிக்கு வக்காலத்து வாங்கவில்லை (வாங்கும் விதத்தில் அவர்கள் பதிலளிக்க வில்லை)

ஆனால் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு விடை அளித்தேன்.

Anonymous said...

//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது?

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.
//

மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள்

அவர்களின் பதவிகள்

1. Tutor
2. Assistant Professor
3. Associate Professor
4. Reader
5. Professor

அவர்களின் பணி
1. சிகிச்சை
2. போதிப்பது

வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் வேலை அல்ல.
(3 துறைகளில் - anatomy, physiology, pharmacology - மட்டும் தான் அவர்களுக்கு பாடம் மட்டுமே பணி.)

அந்த மருத்துவக்கல்லூரியை சார்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது
இந்த ”ஆசிரியர்கள்” தான்

இதற்காக தமிழகத்தில் அவர்களுக்கு அதிகம் ஊதியம் அளிக்கப்படுவது கிடையாது.

பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரி போல் பாடம் நடத்துவது மட்டும் வேலை அல்ல.

பல பட்ட மேற்படிப்பு பிரிவுகளில் மாணவர்களே கிடையாது.

உதாரணம்

1. Clinical pharmacology,
2. Endocrinology,
3. Neonatology,
4. Neuroradiology
5. Bio-physics,
6. Community Health administration,
7. Health administration,
8. Hospital administration,
9. Lab medicine,
10. Nuclear Medicine
11. Physical Medicine and Rehabilitation

ஆனால் ஆசிரியர்கள் உண்டு. அவர்களின் பணி நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது

இதனால் தான் நீங்கள் தவறாக் புரிந்து கொண்டுள்ளீர்கள்

அடுத்ததாக மருத்துவத்தை பொறுத்த வரை இந்திய மருத்துவ கவுன்சலின் அறிவுரை படி பட்ட மேற்படி இடங்களில் மாணவர் ஆசிரியர் விகிதம் என்பது 1:1 இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு இரு மாணவர் வரவே முடியாது :) :). ஆசிரியரின் எண்ணிக்கையை விட (பட்ட மேற்படிப்பு) மாணவர்களின் குறைவாகத்தான் இருக்கம்.

இது மற்ற பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரிகள் போலில்லை
--
சந்தேகம் தீர்ந்ததா ??
--
பின் குறிப்பு : நான் மருத்துவக்கல்லூரிக்கு வக்காலத்து வாங்கவில்லை (வாங்கும் விதத்தில் அவர்கள் பதிலளிக்க வில்லை)

ஆனால் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு விடை அளித்தேன்.

மக்கள் சட்டம் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!

ஏன் அனானியாய்...

ஐடி-உடன் வரலாமே..!

மக்கள் சட்டம் said...

//Anonymous Anonymous said...

// அது எந்த துறைக்கு செல்லவேண்டும் என்பதை 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். //

நான் கேள்விப்பட்டது, 5 நாட்களுக்குள் அந்த துறைக்கு அந்த மனுவை மேலனுப்பி அதன் நகலை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும் என்பது. (வெறுமனே மனுதாரருக்கு தெரிவித்தால் மட்டும் போதாது)//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பதிவு திருத்தப்பட்டுள்ளது.

குசும்பன் said...

அருமையான செயல்.

Anonymous said...

ஏதோ எங்களுக்கும் கேள்வி கேட்கத் தெரியும் என்பதைக் காட்ட கேட்டுவிட்டீர்கள். கேள்வி கேட்குமுன்
மருத்துவ மேற்படிப்பு மற்றும் மருத்துவ உயர்கல்வி குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ளும்
வீட்டுப்பாடத்தைக் கூட செய்யவில்லை.
“மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.”

இந்த கால அட்டவணை உங்களுக்கு
தர வேண்டிய அவசியம் என்ன.

'பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.'

துறைவாரியாக என்று கேட்கும் மேதாவிகள் எத்தனை இடங்கள்,
அதில் எத்தனை நிரப்பட்டடுள்ளன
என்பதையுமல்லவா கேட்டிருக்க
வேண்டும்.

கல்லூரி நிர்வாகம் பொறுப்பாக
பதில் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் உருப்படியாக கேள்வி
கெட்பதற்கான home work ஐ
நீங்கள் செய்யவில்லை.

Anonymous said...

தொடரட்டும் உங்கள் மகத்தான பணி !

முரளிகண்ணன் said...

உங்கள் பணி சிறப்பானது. தொடரட்டும்

Anonymous said...

"கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?"

இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது
நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அனுதி இன்றி
MD/MS அல்லது அவற்றிற்கு இணையான படிப்புகளை துவக்க முடியாது. எனவே கேள்வியே தவறு.இப்படி கேள்வி கேட்கும் முன் மருத்துவத்தில் முதுநிலையில் எத்தனை பட்டங்கள்/
பட்டயங்கள் வழங்கப்படுகின்றன,
அதற்கான அங்கீகாரம்/அனுமதி
எந்த அமைப்புகளால் தரப்படுகிறது
என்பது போன்ற தகவல்களை
நீங்கள் முதலில் அறிந்திருக்க
வேண்டும். அவ்வாறெல்லாம்
செய்யாமல் கேள்வி கேட்கிறேன்
பார் என்ற தொனியில் கேள்வி
கேட்டிருக்கிறீர்கள்.

நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அங்கீகாரம்
பெற்ற படிப்புகளை பூர்த்தி செய்த
பின் DNB என்ற பட்டம் வழங்கப்படும்.
உ-ம் DNB in neonatalogy.
இது MD/MSக்கு சமமானதாக கருதப்படுகிறது.இதாவது
உங்களுக்குத் தெரியுமா.

Anonymous said...

//இந்த கால அட்டவணை உங்களுக்கு
தர வேண்டிய அவசியம் என்ன.//
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல் எதற்கு வேண்டும் என்று தெரிவிக்க வேண்டியதில்லை

//துறைவாரியாக என்று கேட்கும் மேதாவிகள் எத்தனை இடங்கள்,
அதில் எத்தனை நிரப்பட்டடுள்ளன
என்பதையுமல்லவா கேட்டிருக்க
வேண்டும்.//

சரிதான். அடுத்த முறை கேட்டு விட வேண்டியது தான்

//இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது
நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அனுதி இன்றி
MD/MS அல்லது அவற்றிற்கு இணையான படிப்புகளை துவக்க முடியாது. //
அப்படியா. சென்னை மருத்துவக்கல்லூரி விதிகளை மீறி எதாவது படிப்பை துவங்கியுள்ளதா என்று கண்டுபிடிக்கத்தான் இந்த கேள்வி.

அப்படி பல படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன என்பது ஊரறிந்த செய்தி. நீங்கள் நாளிதழ்களை படிப்பதில்லையா

//எனவே கேள்வியே தவறு.//
பதில் வந்தவுடன் கேள்வி சரி என்று தெரியும்.

//DNB in neonatalogy.
இது MD/MSக்கு சமமானதாக கருதப்படுகிறது//
DNB in neonatalogy MD/MSக்கு சமமா

என்ன கொடுமை சரவணன் இது ??? (சந்திரமுகி பாணியில் வாசியுங்கள்)

Voice on Wings said...

இந்த விவாதம் சுவாரசியமாகப் போகிறது :)

Anonymous said...

Hello friends,

Some of my friends told me about your interesting blog.

I appreciate your efforts. Keep it up.

I would like to add some more questions in your questionnaire. I have sent those questions in a separate mail to you.

Or you are welcome to contact me thru mail. Being a retired Doc. in Govt. service I have many issues to be discussed and solved.

superlinks said...

வணக்கம் தோழர்
உங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்
பாருங்கள்.

Anonymous said...

//I would like to add some more questions in your questionnaire. I have sent those questions in a separate mail to you.//

அனைவரும் தெரிந்து கொள்ளும்படி இங்கேயே எழுத வேண்டுகிறோம்

sathyan said...

Very good job by you guys... its pathetic to know that people at management take everything so easy and irresponsible..

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!