Thursday, October 18, 2007

நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ திண்டாட்டம்...!

அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம்.

தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை.


இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.

இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின்12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு.

வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது.
.
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே!

மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாக கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம்.

கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காக படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
.
ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி.

நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரசினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை.
.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில். அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' நடப்பதாக பொருள் கொள்ள முடியும்.

கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும்.
.
ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்கு பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத்தேவையில்லை.
-சுந்தரராஜன்
.
பின்குறிப்பு: இந்த பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம்.

10 comments:

அகராதி said...

மிகவும் நியாயமான, அவசியம் யோசிக்க வேண்டிய கருத்துகள்.

(பின்குறிப்பு: தாங்கள் எழுதியுள்ள பின் குறிப்பு, மருந்து உண்ணும்போது குரங்கை நினைக்க வேண்டாம் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது)

Anonymous said...

இந்த மட்டமான பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். குறை சொல்லி பேர் வாங்கும், பிளாக்கிலும் விளம்பரம் மற்றும் கட்சிக்காரரை தேடும், தமிழ்நாட்டில் மெரிட்டில் சீட் கிடைக்காமல் காசு கொடுத்து LLM வாங்கிய சிலரை எப்படி திருத்துவது என்பது தான் புரியவில்லை.
- ஒரு வழக்கறிஞர்.

Anonymous said...

மிகவும் சரியான பதிவு

வெள்ளைகாரன் ஆண்ட நாட்களில் வெள்ளைகார நீதிபதிகள் இங்கிலாந்து செல்ல கோடை விடுமுறை விடப்பட்டது

அது போல இப்பவும் நம் மக்களே ஆளும் போது இது போல கோமாளி கூத்துக்கள் நடப்பதை யார் தான் திருத்துவாரோ..

வக்கீல்கள் என்றாலே ரவுடிகள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

கடந்த 25 வருட வரலாற்றை புரட்டி பார்த்தால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சட்ட கல்லூரிகளும் இயங்கிய நாட்களை விட இயங்காத அதாவது வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் போன்ற ஒன்றுக்கும் உதவாத சேவைகளில் தாங்கள் படிக்கும் நாட்களில் இருந்து சேவை புரிகிறார்கள்.

Anonymous said...

There can be a discussion on holidays and functioning of courts.
But your tone and tenor is not the right one. Judges also need
time to read, reflect and write
judgments. You cannot expect them
to sit in courts six days a week and deliver judgments also in time.

The governments are not doing enough to create new courts, fill
up vaccancies and reduce the number of litigation.Governments are major litigators.

The major problem is neither the executive nor legislatures are
doing their jobs properly.
Number of cases will come down
if they function properly.

Advocates have a vested interest
in the system.Are they ready for
rules that would limit no. of adjourments, delivery of documents
and papers within specified period.
So you better start your concern by talking about reforms in the
legal practice.

Anonymous said...

கடந்த 25 வருட வரலாற்றை புரட்டி பார்த்தால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சட்ட கல்லூரிகளும் இயங்கிய நாட்களை விட இயங்காத அதாவது வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் போன்ற ஒன்றுக்கும் உதவாத சேவைகளில் தாங்கள் படிக்கும் நாட்களில் இருந்து சேவை புரிகிறார்கள்.

So what of legal education they get. How can they be well equipped
to understand and practice if the
classes are not held on most days.

அகராதி said...

//வக்கீல்கள் என்றாலே ரவுடிகள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.//

அனைத்து துறையிலும் ரவுடிகள் உள்ளனர். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்கள்தானா? அங்கேயும் கிட்னி திருடர்களும், காசுக்காக கருக்கலைப்பு செய்பவர்களும், ஆபாசப்படம் எடுப்பவர்களும் உள்ளனர்.

பொறியியல் படித்தவர்கள் தானே லஞ்ச ஊழல் காரணமாக தரம் குறைந்த கட்டடங்களை கட்டுகின்றனர். தொழில்நுட்பத்துறையில் கம்ப்யூட்டர் வைரஸை உருவாக்குபவர்களே மெத்தப்படித்த தொழில் வல்லுனர்கள்தானே.

பள்ளிநேரத்தில் பாடம் நடத்தாமல், ட்யூஷன் நேரத்தில் மட்டும் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உத்தமர்களா?

எந்தத்துறையில்தான் ரவுடிகள் இல்லை. காவல்துறையினரை எதிர்த்து கேள்வி கேட்கும் திராணி உள்ளவர்கள் வழக்கறிஞர்கள்தான் என்பதால், காவல்துறையினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் வழக்கறிஞர்கள் என்பதால்தான் வழக்கறிஞர்களை ரவுடிகள் போல் காவல்துறையினர் சித்தரிக்கின்றனர்.

இதனால் அனைத்து வழக்கறிஞர்களும் நல்லவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது. ஆனால் முதலாளிகளுக்கு ஆதரவாக வாதிட மாட்டேன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட மாட்டேன் என்று உறுதியாக நிற்கும் வழக்கறிஞர்களும் உள்ளனர்.

எனவே இதுபோன்ற வாதங்களை ஆரோக்கியமாக நிகழ்த்த வேண்டும்.

kuppusamy said...

நல்ல கருத்துக்கள் வழக்குகள் விரைவவில முடிக்க இவ்வளவு விடுமுறைகள் தேவையில்லை. நன்றி.
க.பொ.குப்புசாமி.(D.S.P.)

Anonymous said...

பெரும்பான்மை மக்களுக்கு நன்மை செய்வதே உயர்வான சட்டம் / REGARD FOR THE PUBLIC WELFARE IS THE HIGHEST LAW / SALUS POPULI EST SUPREMA LEX

Public Welfare does not mean that what benefits the majority is public welfare. Please understand this.

Anonymous said...

உண்மை என்னவென்றால்... சட்ட துறையில் தலித்களின் ஆதிக்கம் எப்பொழுது ஆரம்பமானதோ அப்போதில் இருந்து இந்த பிரச்சனைகள் வருகின்றன அவர்கள்ளுக்கு தெரிந்ததெல்லாம் அடி உதை, வெட்டு, குத்து. நாட்டை சீரழிப்பதில் முதலிடம் அவர்கள்ளுக்கு தன் என்பதில் சந்தகமில்லை. அதே பிராமிணர்களை பாருங்கள், நல்ல கல்வி கற்று, உண்மையான,தரமான சட்ட மேதைகளாக இருகின்றனர்

Anonymous said...

உண்மை என்னவென்றால்... சட்ட துறையில் தலித்களின் ஆதிக்கம் எப்பொழுது ஆரம்பமானதோ அப்போதில் இருந்து இந்த பிரச்சனைகள் வருகின்றன அவர்கள்ளுக்கு தெரிந்ததெல்லாம் அடி உதை, வெட்டு, குத்து. நாட்டை சீரழிப்பதில் முதலிடம் அவர்கள்ளுக்கு தன் என்பதில் சந்தகமில்லை. அதே பிராமிணர்களை பாருங்கள், நல்ல கல்வி கற்று, உண்மையான,தரமான சட்ட மேதைகளாக இருகின்றனர்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!