Tuesday, December 4, 2007

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்கு இல்லை – ப. சிதம்பரம் (மறைமுக) ஒப்புதல்

வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது. நன்றி: தினமலர் 30-11-07

இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=3148), இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” (http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/78385.pdf) யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=3961&Mode=0) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில்,
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம்,
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும்,
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன.

இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி: தினத்தந்தி 04-12-07

மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது.

மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது.

1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா?

2.ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக?

3. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா?

4. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக?

5. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா?

6. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது?

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

19 comments:

அகராதி said...

சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

Anonymous said...

பிரபலமான மனிதர்களை தாக்குவதன் மூலம் மலிவான விளம்பரம் தேடும் ஆசையே இந்தப் பதிவு.

நாட்டின் பொருளாதார வளத்தை திட்டமிட வேண்டிய ஒரு நிதியமைச்சர் இதுபோன்ற சில்லறை விவகாரங்களில் தலையிட இயலுமா என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிடும் கடன்களுக்கான வட்டியும் இதர கட்டணங்களும் அதிகம் என்பதை அனைவருமே அறிவர். இருந்தபோதிலும் கடன் வாங்கினால்போதும் என்று வாங்கிவிட்டு அதையும் ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால்தான் அவர்கள் அடுத்த முறையாவது பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.

K.R.அதியமான் said...
This comment has been removed by a blog administrator.
மக்கள் சட்டம் said...

திரு K.R.அதியமான் அவர்களுக்கு,

ஆங்கில பதிவுகள் நீக்கப்படும் என்ற எங்கள் அறிவிப்பின்படி தங்கள் மறுமொழி நீக்கப்படுகிறது. தங்கள் கருத்துகளை தமிழில் பதிவு செய்ய அழைக்கிறோம்.

தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்காக எழில்நிலா இணைக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

அகராதி said...
சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

Repeatey...!

K.R.அதியமான் said...

///அனானி மற்றும் ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும்///

அனானி ???? but annoy seems to be allowed. hence i wrote in english

அகராதி said...

K.R.அதியமான். 13230870032840655763 said...
///அனானி மற்றும் ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும்///

அனானி ???? but annoy seems to be allowed. hence i wrote in english




தமிழை நீசபாஷைன்னு சொன்ன சங்கராச்சாரியோட வாரிசுன்னு நினைக்கிறேன். இ ந்த ஜென்மங்களை திருத்தவே முடியாது.

K.R.அதியமான் said...

அய்யா அகராதி,

என் தமிழ் டைப்பிங் மிக மிக வேகம் குறைவு. மேலும் அந்த நீண்ட ஆங்கில கட்டுரை மொழிபெயர்பு கடினம்....அதனால் தான்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இந்த விடயத்தில் மட்டுமல்ல எந்த விடயத்திலுமே தனியாரை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் இல்லை போலிருக்கிறது.சில நாட்கள் முன்பு வந்த செய்தி - விமான நிறுவனங்கள் பெட்ரோலுக்கான அதிக்கப்படியான கட்டணத்தை(surcharge) அரசாங்க வரி போல வசூலிக்கிறார்களாம். இவர்கள் வாய் மொழியாக் சொன்னார்களாம்.ஒன்றும் நடக்கவில்லையாம்.இப்போது கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம்.இது எப்படி இருக்கு?

அகராதி said...

உலக மயம், தனியார் மயம், தாராள மயம் என்ற கொள்கைவழி நடக்கும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாவின் ஆட்சியில் வங்கி மற்றும் வான்வெளிப்போக்குவரத்துத்துறை மட்டுமல்ல...கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தனியாருக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவுமே செயல்படுகின்றன.

இந்தப்போக்கில் கம்யூனிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பயணம் செய்கின்றன.

பத்திரிகைகளோ மக்களுக்கு அறிவூட்டும் செய்திகளைவிட கிளர்ச்சியூட்டும் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. இதில் பிளாக்குகளும் விதிவிலக்கல்ல.

Anonymous said...

//பத்திரிகைகளோ மக்களுக்கு அறிவூட்டும் செய்திகளைவிட கிளர்ச்சியூட்டும் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. இதில் பிளாக்குகளும் விதிவிலக்கல்ல.//

அறிவாளி என்று கருதிக்கொள்ளும் அகராதி அவர்களுக்கும், இந்த கமென்ட்டை இதுவரை அகற்றாத மக்கள் சட்டம் கும்பலுக்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மக்கள் சட்டம் said...

ஆங்கில பதிவுகள் நீக்கப்படும் என்ற எங்கள் அறிவிப்பின்படி தங்கள் மறுமொழி நீக்கப்படுகிறது. தங்கள் கருத்துகளை தமிழில் பதிவு செய்ய அழைக்கிறோம்.

தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்காக எழில்நிலா இணைக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

உங்களுக்கு அறியாமை அதிகம். ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் அரசு கட்டுப்படுத்த முடியாது.சிதம்பரம் தன்னிச்சையாக யாரையும் வீட்டுக்கு அனுப்ப முடியாது. விதிமுறைகளை வங்கிகள் மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டியது ரிசர்வ் வங்கி. அது தன்னாட்சி பெற்றது. நிதி அமைச்சகம் அதன் நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிட முடியாது. சட்டம் படித்த உங்களுக்கு அடிப்படை விதிகள் கூடத் தெரியவில்லை. சிதம்பரம், மன்மோகன் சிங் கட்டுப்பாட்டில் தனியார் நிறுவனங்கள் இல்லை. விடுதலைத்தனமாக விதண்டாவாதம் பண்ணத்தன் உங்களுக்குத் தெரிகிறது.விடுதலை இந்துமத எதிர்ப்பு ஏடு.அது போல் உங்கள் பதிவும் சிலரை எதிர்க்கிறது.
உங்களுடைய பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினையை இப்படியா எழுதுவீர்கள். சிதம்பரத்தினை, கலாமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஏன் இப்படி எழுதி உங்கள் முட்டாள்த்த்தனத்தினை
வெளிக்காட்டுகிறீர்கள்?

seethag said...

இது மிகவும் முக்கியமான பதிவு.இந்த வாரம் பெனாத்தல் சுரேஷ் ஒரு கதை எழுதியுள்ளார்.மிகவும் பயம்மாக இருந்தது படிக்கவே.....

மக்கள் சட்டம் said...

நன்றி Ms. Seetha!

(தாமதத்திற்கு மன்னிக்கவும்.பணிச்சுமை)

“கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?”
என்ற பதிவை http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post_3201.html என்ற இணைப்பில் சொடுக்கி படித்தால் தங்கள் பயம் விலகும். மீறி பயம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

-சுந்தரராஜன்
(98402 46661)

Anonymous said...

CHINA CHOW NUDE
[url=http://my.curse.com/members/LORINDA3.aspx]CHINA CHOW NUDE[/url]
CHINA CHOW NUDE
[url= http://my.curse.com/members/LORINDA3.aspx ] CHINA CHOW NUDE [/url]
MICHELLE HUNZIKER NUDE
[url=http://my.curse.com/members/LORINDA3.aspx]MICHELLE HUNZIKER NUDE[/url]
MICHELLE HUNZIKER NUDE
[url= http://my.curse.com/members/LORINDA3.aspx ] MICHELLE HUNZIKER NUDE [/url]
KATHLEEN ROBERTSON NUDE
[url=http://my.curse.com/members/LORNA3.aspx]KATHLEEN ROBERTSON NUDE[/url]
KATHLEEN ROBERTSON NUDE
[url= http://my.curse.com/members/LORNA3.aspx ] KATHLEEN ROBERTSON NUDE [/url]
LACEY CHABERT NUDE
[url=http://my.curse.com/members/LORRETTA3.aspx]LACEY CHABERT NUDE[/url]
LACEY CHABERT NUDE
[url= http://my.curse.com/members/LORRETTA3.aspx ] LACEY CHABERT NUDE [/url]
JOSIE MARAN NUDE
[url=http://my.curse.com/members/LORRIANE2.aspx]JOSIE MARAN NUDE[/url]
JOSIE MARAN NUDE
[url= http://my.curse.com/members/LORRIANE2.aspx ] JOSIE MARAN NUDE [/url]

Anonymous said...

LYDIA HEARST NUDE
[url=http://my.curse.com/members/LORRIN1.aspx]LYDIA HEARST NUDE[/url]
LYDIA HEARST NUDE
[url= http://my.curse.com/members/LORRIN1.aspx ] LYDIA HEARST NUDE [/url]
ALANIS MORISSETTE NUDE
[url=http://my.curse.com/members/LOUANN1.aspx]ALANIS MORISSETTE NUDE[/url]
ALANIS MORISSETTE NUDE
[url= http://my.curse.com/members/LOUANN1.aspx ] ALANIS MORISSETTE NUDE [/url]
NEVE CAMPBELL NUDE
[url=http://my.curse.com/members/LOUELLA2.aspx]NEVE CAMPBELL NUDE[/url]
NEVE CAMPBELL NUDE
[url= http://my.curse.com/members/LOUELLA2.aspx ] NEVE CAMPBELL NUDE [/url]
PATSY KENSIT NUDE
[url=http://my.curse.com/members/LOUIE7.aspx]PATSY KENSIT NUDE[/url]
PATSY KENSIT NUDE
[url= http://my.curse.com/members/LOUIE7.aspx ] PATSY KENSIT NUDE [/url]
ROSE BYRNE NUDE
[url=http://my.curse.com/members/LOUISE3.aspx]ROSE BYRNE NUDE[/url]
ROSE BYRNE NUDE
[url= http://my.curse.com/members/LOUISE3.aspx ] ROSE BYRNE NUDE [/url]

Anonymous said...

JERI RYAN NUDE
[url=http://my.curse.com/members/LILLIAN5.aspx]JERI RYAN NUDE[/url]
JERI RYAN NUDE
[url= http://my.curse.com/members/LILLIAN5.aspx ] JERI RYAN NUDE [/url]
ELSA PATAKY NUDE
[url=http://my.curse.com/members/LILLIANA4.aspx]ELSA PATAKY NUDE[/url]
ELSA PATAKY NUDE
[url= http://my.curse.com/members/LILLIANA4.aspx ] ELSA PATAKY NUDE [/url]
SHAUNA SAND NUDE
[url=http://my.curse.com/members/LILLIE6.aspx]SHAUNA SAND NUDE[/url]
SHAUNA SAND NUDE
[url= http://my.curse.com/members/LILLIE6.aspx ] SHAUNA SAND NUDE [/url]
BILLIE PIPER NUDE
[url=http://my.curse.com/members/LINETTE4.aspx]BILLIE PIPER NUDE[/url]
BILLIE PIPER NUDE
[url= http://my.curse.com/members/LINETTE4.aspx ] BILLIE PIPER NUDE [/url]
KIM CATTRALL NUDE
[url=http://my.curse.com/members/LINNEA6.aspx]KIM CATTRALL NUDE[/url]
KIM CATTRALL NUDE
[url= http://my.curse.com/members/LINNEA6.aspx ] KIM CATTRALL NUDE [/url]

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!