Thursday, June 12, 2008

“மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்” -கருத்தரங்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.

நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

(இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னை பதிவர் சந்திப்புக்கு செல்லலாம்)

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல. சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.

தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.

அனைவரும் வருக!

11 comments:

Anonymous said...

ஞாயிற்றுக்கிழமை மதியம் கருத்தரங்கத்தில சாப்பாடு.

ஈவ்னிங் வலைபதிவர் சந்திப்புல டிபன்.

ஒரே ஜாலிதான் போங்க.

அதுசரி இந்த சாப்பாட்டில மரபணு மாற்றம் இல்லாத உணவுப்பொருட்கள்தானே தருவாங்க... :)

Unknown said...

அருமையான முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள். கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

Anonymous said...

உக்காய்ந்து யோசிக்க வேண்டிய தலைப்புதான்.

ம்ம் நடக்கட்டும். நானும் வர்றேன்.

முரளிகண்ணன் said...

நல்ல முயற்சி. கண்டிப்பாக வருகிறேன்.

Anonymous said...

:)

Anonymous said...

அருமையான முயற்சி.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் கலந்து கொள்ளவிருக்கும் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி பேசப்பட்ட விடயங்களை வலைப்பதிவர்கள் எல்லோரும் தத்தமது பாணியில் பதிவாக எழுதினால் கலந்து கொள்ள இயலாத என்னைப் போன்றவர்கள் விளங்கிக் கொள்ள ஏதுவாயிருக்கும்..

நன்றி-
ராஜேஷ்குமார்

Anonymous said...

//நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி பேசப்பட்ட விடயங்களை வலைப்பதிவர்கள் எல்லோரும் தத்தமது பாணியில் பதிவாக எழுதினால் கலந்து கொள்ள இயலாத என்னைப் போன்றவர்கள் விளங்கிக் கொள்ள ஏதுவாயிருக்கும்..//

வலைபதிவர்கள் கவனத்திற்கு...

அகராதி said...

இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு கல்யாண பிரியாணி வழங்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Anonymous said...

In my system the invitation is too small and its not expanding. I have to save the same in my system and read it. Avoid such a mess in future.

But the theme of this workshop is very important one. I will attend the workshop.

I wish all success for this wonderful event.

sarathbabu said...

this is way of new revolt. definetly i will participated.

Anonymous said...

"பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?"

அவற்றின் மேல் FPO என்ற முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.உள்ளடக்கம்
எவை என்பதைப் படித்தறியவும்.
உணவு பொருட்களுக்கு அக்மார்க்
முத்திரையைப் பார்த்து தீர்மானிக்கலாம்.
ஜாம்,பழரச வகைகளுக்கும்
மரபணு மாற்றத்திற்கும்
தொடர்பே இல்லை.
இதைக் கூட அறியாத
அறிஞர்கள்தான் இந்தக்கருத்தரங்குகளை நடத்துகிறார்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!